ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (28-2-2017 முதல் 6-3-2017 வரை)

Published On 2017-02-28 03:52 GMT   |   Update On 2017-02-28 03:52 GMT
28-2-2017 முதல் 6-3-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
28-ந்தேதி (செவ்வாய்) :

* திருநெல்வேலி டவுண் மேல ரத வீதி பரமேஸ்வரி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் தெப்பத் திருவிழா.
* கோயம்புத்தூர் கோணியம்மன் திருக்கல்யாண வைபவம், இரவு மகிஷாசூர சம்ஹாரம்.
* நத்தம் மாரியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* திருகோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம்.
* மேல்நோக்கு நாள்.

1-ந்தேதி (புதன்) :

* திருச்செந்தூர், பெருவயல், பாவூர்சத்திரம், சென்னிமலை சுப்பிர மணிய சுவாமி கோவில்களில் மாசி மகம் உற்சவம் ஆரம்பம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் ரத உற்சவம்.
* திருவைகாவூர் சிவபெருமான் பவனி.
* வேதாரண்யம் சிவபெருமான் உற்சவம் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.

2-ந்தேதி (வியாழன்) :

* சதுர்த்தி விரதம்.
* திருப்பாப்புலியூர், காஞ்சி, மதுரை நன்மை தருவார் கோவில்களில் மாசி மகம் உற்சவம் தொடக்கம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் சிங்க கேடயத்தில் பவனி.
* பெருவயல் முருகன் மேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* திருத்தணி, காங்கேயநல்லூர், திருப்போரூர் ஆகிய தலங்களில் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை கூடலழகர் கோவில் உற்சவம் ஆரம்பம், காலை அன்ன வாகனத்தில் சுவாமி ராஜாங்க சேவை.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பாரி வேட்டைக்கு எழுந்தருளி, குதிரை வாகனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.



3-ந்தேதி (வெள்ளி) :

* சஷ்டி விரதம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கோவிலில் கருட சேவை.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை பூங்கோவில் சப்பரத்தில் பவனி.
* மதுரை கூடலழகர் அலங்கார சீவிகையில் மச்ச அவதாரக் காட்சி, இரவு சிம்ம வாகனத்தில் ராஜாங்க அலங்கார சேவை.
* கோயம்புத்தூர் கோணியம்மன் இந்திர விமானத்தில் தெப்ப உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (சனி) :

* கார்த்திகை விரதம்.
* திருப்பரங்குன்றத்தில் பங்குனி உற்சவம் ஆரம்பம்.
* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை தங்க முத்துக்கிடா வாகனத்திலும், அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்டர் கோவிலில் அவதார தின விழா. காலை 6 மணிக்கு தொட்டில் வாகனத்தில் பவனி.
* திருப்போரூர் முருகப்பெருமான் பிரணவ மந்திரம் உபதேசித்து அருளிய லீலை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்நோக்கு நாள்.

5-ந்தேதி (ஞாயிறு) :


* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குடவருவாயில் ஆராதனை.
* மதுரை கூடலழகர், கள்ளர் திருக்கோலமாய் காட்சியளித்தல், இரவு கருட சேவை.
* திருத்தணி முருகப்பெருமான் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி நாக வாகனத்திலும் புறப்பாடு.
* குடந்தை சக்கரபாணி சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கோட்டியூர் சவுமிநாராயண பெருமாள் தோளுக்கினியானில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

6-ந்தேதி (திங்கள்) :

* திருச்செந்தூர் முருகப்பெருமான் காலை கோ ரதத்திலும், இரவு வெள்ளி தேரிலும் பவனி
* மதுரை கூடலழகர் காலை கஜேந்திர மோட்சம் அருளல், இரவு சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* காங்கேயநல்லூர் முருகப்பெருமான் தெய்வானை திருமணக் காட்சி.
* குடந்தை சக்கரபாணி கருட வாகனத்தில் வீதி உலா.
* சமநோக்கு நாள்.

Similar News