ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (21-2-2017 முதல் 27-2-2017 வரை)

Published On 2017-02-21 03:08 GMT   |   Update On 2017-02-21 03:08 GMT
21-2-2017 முதல் 27-2-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
21-ந்தேதி (செவ்வாய்) :

* கோயம்புத்தூர் கோணியம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் வெள்ளி யானை வாகனத்தில் வீதி உலா.
* சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

22-ந்தேதி (புதன்) :

* சர்வ ஏகாதசி.
* காளஹஸ்தி சிவன் கோவிலில் சுவாமி வீதி உலா.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் தங்க விருட்ச வாகனத்தில் சேவை.
* கோயம்புத்தூர் கோணியம்மன் புலி வாகனத்தில் புறப்பாடு.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

23-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருவைகாவூர், ஸ்ரீசைலம் ஆகிய தலங்களில் சிவபெருமான் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் முத்தங்கி சேவை.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் கிளி வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.
* மேல்நோக்கு நாள்.

24-ந்தேதி (வெள்ளி) :

* மகா சிவராத்திரி.
* பிரதோஷம்.
* திருநெல்வேலி தொண்டர்கள் நயினார் கோவிலில் பஞ்சமுக அர்ச்சனை.
* குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.
* மூங்கிலணை காமாட்சி அம்மன் பெருந்திருவிழா.
* கடம்பூர் சண்முகநாதர் கோவிலில் ஆறுகால பூஜைகளுடன் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் மின்விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

25-ந்தேதி (சனி) :

* திருகோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய சிவபெருமான் தலங்களில் ரத உற்சவம்.
* கோயம்புத்தூர் கோணியம்மன் அன்ன வாகனத்தில் திருவீதி உலா.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் ரதத்தில் பவனி, இரவு தங்க குதிரையில் உலா.
* திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

26-ந்தேதி (ஞாயிறு) :

* அமாவாசை.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பத்திர தீபம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் கோவிலில் சுவாமி, அம்மன் இந்திர விமானத்தில் பவனி.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில்களில் தெப்ப உற்சவம்.
* திருவைகாவூர், திருகோகர்ணம், ஸ்ரீசைலம் ஆகிய சிவன் கோவில் களில் திருக்கல்யாண உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

27-ந்தேதி (திங்கள்) :

* கோயம்புத்தூர் கோணியம்மன் வெள்ளி யானை வாகனத்தில் திருவீதி உலா.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

Similar News