ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (14-2-2017 முதல் 20-2-2017 வரை)

Published On 2017-02-14 03:41 GMT   |   Update On 2017-02-14 03:41 GMT
14-2-2017 முதல் 20-2-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
14-ந் தேதி (செவ்வாய்) :

* சங்கடஹர சதுர்த்தி.
* கோயம்புத்தூர் கோணியம்மன் பூச்சாற்று விழா.
* திருமயம் ஆண்டாள் திருக்கல்யாணம், இரவு புஷ்பப் பல்லக்கில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

15-ந் தேதி (புதன்) :

* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ரத உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

16-ந் தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வரும் காட்சி.
* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (வெள்ளி) :


* முகூர்த்த நாள்.
* ராமநாதபுரம் அன்னை முத்தாலம்மன் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் பிரம்மோற்சவம், இரவில் தங்க நந்தி வாகனத்தில் சுவாமியும், அம்மன் வெள்ளி அம்ச வாகனத்திலும் திருவீதி உலா.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

18-ந் தேதி (சனி) :


* ராமேஸ்வரம் ராமநாதர் வெள்ளி கற்பக விருட்ச வாகனத்திலும், அம்மன் வெள்ளி காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் திருவீதி உலா.
* குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் சிறப்பு ஆராதனை.
* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (ஞாயிறு) :

* திருகோகர்ணம், காளஹஸ்தி, ஸ்ரீசைலம், திருவைகாவூர் ஆகிய தலங் களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
* ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமி வெள்ளி பூத வாகனத்திலும், அம்மன் வெள்ளி கிளி வாகனத்திலும் திருவீதி உலா.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* சமநோக்கு நாள்.

20-ந் தேதி (திங்கள்) :

* திருவைகாவூர் சிவபெருமான் பவனி வரும் காட்சி.
* ராமேஸ்வரம் சுவாமி வெள்ளி கயிலாய வாகனத்திலும், அம்மன் தங்க சிம்ம வாகனத்திலும் புறப்பாடு கண்டருளல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.

Similar News