ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (7-2-2017 முதல் 13-2-2017 வரை)

Published On 2017-02-07 03:42 GMT   |   Update On 2017-02-07 03:42 GMT
7-2-2017 முதல் 13-2-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
7-ந்தேதி (செவ்வாய்) :

* சர்வ ஏகாதசி.
* ஆழ்வார் திருநகரியில் மாசி உற்சவம் ஆரம்பம்.
* குன்றக்குடி முருகன் கோவிலில் வெள்ளி ரத உற்சவம்.
* குரங்கணி முத்துமாலையம்மன் கோவிலில் அம்மன் திருமாலை உற்சவம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி மயில் வாகனத்தில் வீதி உலா.
* பழனி முருகப்பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் புறப்பாடு.
* திருவிடைமருதூர் சிவ பெருமான் குதிரை வாகனத்திலும், அம்மன் கிளி வாகனத்திலும் பவனி.
* சமநோக்கு நாள்.

8-ந்தேதி (புதன்) :

* பிரதோஷம்.
* பழனி பாலதண்டாயுதபாணி திருக்கல்யாண உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கதிரறுப்பு விழா.
* திருச்சேறை சாரநாதர் காலை வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் ராஜாங்க அலங்காரம்.
* கோயம்புத்தூர் பாலதண் டாயுதபாணி கோவிலில் திருக்கல்யாண உற்சவம்.
* குன்றக்குடி, திருப்புடை மருதூர், திருவிடைமருதூர் ஆகிய தலங்களில் சிவ பெருமான் ரத உற்சவம்.
* சகல சிவன் கோவில்களிலும் நந்தீஸ்வரரை வழிபடுவது நல்லது.
* மேல்நோக்கு நாள்.

9-ந்தேதி (வியாழன்) :

* தைப்பூசம்
* முகூர்த்த நாள்.
* மருதமலை, பழனி, கழுகுமலை ஆகிய முருகன் தலங்களில் ரத உற்சவம்.
* நெல்லை டவுண் கரிய மாணிக்கப் பெருமாள் கோவில் வருசாபிஷேகம்.
* உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ரத உற்சவம்.
* வடலூரில் அருட்பெருஞ்ஜோதி தரிசனம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க குதிரையிலும், அம்மன் வெள்ளி சிம்மாசனத்திலும் வண்டியூரில் எழுந்தருளி தெப்ப உற்சவம்.
* சமநோக்கு நாள்.

10-ந்தேதி (வெள்ளி) :

* பவுர்ணமி விரதம்.
* சங்கரன்கோவில் கோமதி அம்மன் தெப்ப உற்சவம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சவுந்திர சபா நடனம்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலவர் ஆகிய தலங் களில் தெப்பத் திருவிழா.
* திருச்சேறை சாரநாதர் சப்தாவரணம்.
* திருவண்ணாமலை அருணாச்சல நாயகர் கோவில் கிரிவலம்.
* பழனி முருகப்பெருமான் தங்க குதிரையில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

11-ந்தேதி (சனி) :

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் தெப்ப உற்சவம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மாசி மண்டல உற்சவம் தொடக்கம்.
* ஆழ்வார்திருநகரி ஆதி கேசவ பெருமாள் கருட வாகனம்.
* கீழ்நோக்கு நாள்.

12-ந்தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* பழனி முருகப்பெருமான் தோளுக்கினியானில் தெப்பத் திருவிழா.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் பவனி வருதல்.
* கீழ்நோக்கு நாள்.

13-ந்தேதி (திங்கள்)) :

* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* திருமயம் ஆண்டாள் முத்துக்குறி கண்டருளல்.
* கீழ்திருப்பதி கோவிந்த ராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

Similar News