ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (31-1-2017 முதல் 6-2-2017 வரை)

Published On 2017-01-31 03:34 GMT   |   Update On 2017-01-31 03:34 GMT
31-1-2017 முதல் 6-2-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
31-ந் தேதி (செவ்வாய்) :

* சதுர்த்தி விரதம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவிலில் உற்சவம் ஆரம்பம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கயிலாய வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் திருவீதி உலா.
* திருவிடைமருதூர், திருப்புடை மருதூர், குன்றக்குடி, பழனி, திருநெல்வேலி ஆகிய தலங்களில் சிவபெருமான் உற்சவம் தொடக்கம்.
* பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் சுவாமி புறப்பாடு கண்டருளல்.
* கீழ்நோக்கு நாள்.

1-ந் தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி சாலைக்குமார சுவாமி கோவில் வருசாபிஷேகம்.
* திருச்சேறை சாரநாதர் கோவில் உற்சவம் ஆரம்பம்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் சுவாமி பவனி வருதல்.
* திருவிடைமருதூர் சிவபெருமான் வெள்ளி சூரிய பிரபையில் புறப்பாடு.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் இருவரும் வெள்ளி சிம்மாசனத்தில் திருவீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல்.
* மேல்நோக்கு நாள்.

2-ந் தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலை, இரவு தங்க மயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருச்சேறை சாரநாதர் சூரிய பிரபையில் வேணுகோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.
* காஞ்சீபுரம் உலகளந்த பெருமாள் கோவில் கருட சேவை.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி கோவில் உற்சவம் ஆரம்பம்.
* சமநோக்கு நாள்.

3-ந் தேதி (வெள்ளி) :

* ரத சப்தமி.
* திருப்பதியில் வெங்கடேசப் பெருமாள் ரத சப்தமி திருவிழா.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் நெல்லுக்கு வேலி கட்டின திருவிளையாடல்.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சூரிய பிரபையில் பவனி.
* திருச்சேறை சாரநாதர் பரமபத நாதன் திருக்கோலமாய் சேஷ வாகனத்தில் வீதி உலா.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ரத்தின சிம்மாசனத்தில் பவனி.
* சமநோக்கு நாள்.

4-ந் தேதி (சனி) :


* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நந்தி வாகனத்திலும், அம்மன் யாழி வாகனத்திலும் பவனி வருதல்.
* திருச்சேறை சாரநாதர் வெள்ளி கருட வாகனத்தில் புறப்பாடு.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி சந்திர பிரபையில் பவனி.
* பழனி முருகப்பெருமான் வெள்ளி ஆட்டுக்கிடா வாகனத்தில் திருவீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

5-ந் தேதி (ஞாயிறு) :

* கார்த்திகை விரதம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் சின்ன வைரத் தேரில் ரத உற்சவம், இரவு தங்கமயில் வாகனத்தில் திருவீதி உலா.
* திருச்சேறை சாரநாதர், ராம அவதாரத்தில் காட்சி அருளல், இரவு அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடு.
* குன்றக்குடி முருகப்பெருமான் தங்க ரதத்தில் பவனி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் காலை தங்க பல்லக்கிலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வலம் வருதல்.
* கீழ்நோக்கு நாள்.

6-ந் தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* திருச்சேறை சாரநாதர் திருக்கல்யாண உற்சவம், இரவு யானை வாகனத்தில் சுவாமி வீதி உலா.
* கோயம்புத்தூர் பாலதண்டாயுதபாணி அன்ன வாகனத்தில் வலம் வருதல்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

Similar News