ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (24-1-2017 முதல் 30-1-2017 வரை)

Published On 2017-01-24 05:43 GMT   |   Update On 2017-01-24 05:43 GMT
24.1.2017 முதல் 30.1.2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
24-ந் தேதி (செவ்வாய்)

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை அம்ச வாகனத்திலும், இரவு சூரிய பிரபையிலும் பவனி வருதல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவாசல் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

* மதுரை செல்லாத்தம்மன் சப்பரத்தில் புறப்பாடு கண்டருளல்.

* சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சமநோக்கு நாள்.

25-ந் தேதி (புதன்)


* பிரதோஷம்.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீப உற்சவம் ஆரம்பம்.

* திருவாவடுதுறை கோவிலில் ரத சப்தமி விழா உற்சவம் தொடக்கம்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

* கல்லிடைக்குறிச்சி சிவ பெருமான் கோவில் உற்சவம் ஆரம்பம்.

* மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை.

* கீழ்நோக்கு நாள்.

26-ந் தேதி (வியாழன்)


* மாத சிவராத்திரி.

* மதுரை செல்லாத்தம்மன் காலை சிம்மாசனத்தில் காட்சி அருளி, இரவு பட்டாபிஷேக திருக்கோலம்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர பிரபையிலும் புறப்பாடு கண்டருளல்.

* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (வெள்ளி)

* தை அமாவாசை.

* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பத்திர தீபம், ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் காலை நாச்சியார் திருக்கோலம், இரவு யாழி வாகனத்தில் பவனி.

* மதுரை செல்லாத்தம்மன் கோவில் ரத உற்சவம்.

* மதுரை மீனாட்சியம்மன் வைர கிரீடம் சாத்தியருளல்.

* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

28-ந் தேதி (சனி)

* மதுரை செல்லாத்தம்மன் காலை புஷ்ப சப்பரத்தில் தீர்த்தவாரி, இரவு புஷ்ப பல்லக்கில் பவனி.

* திருவள்ளூர் வீரராக பெருமாள் காலை சூர்ணாபிஷேகம், இரவு வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சியளித்தல்.

* உப்பிலியப்பன் கோவில் சீனிவாச பெருமாள் புறப்பாடு.

* மேல்நோக்கு நாள்.

29-ந் தேதி (ஞாயிறு)

* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்.

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் ரத உற்சவம்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் வெள்ளி பூத வாகனத்தில் திருவீதி உலா.

* கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.

* மேல்நோக்கு நாள்.

30-ந் தேதி (திங்கள்)

* திருவள்ளூர் வீரராகவ பெருமாள் தொட்டி திருமஞ்சனம், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.

* மதுரை மீனாட்சி சொக்கநாதர் பூத வாகனத்தில் புறப்பாடு கண்டருளல்.

* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் அன்ன வாகனத்தில் பவனி.

* மேல்நோக்கு நாள்.

Similar News