ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (10-1-2017 முதல் 16-1-2017 வரை)

Published On 2017-01-10 03:41 GMT   |   Update On 2017-01-10 03:41 GMT
10-1-2017 முதல் 16-1-2017 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளின் தொகுப்பை இந்த பகுதியில் விரிவாக பார்க்கலாம்.
10-ந்தேதி (செவ்வாய்) :

* பிரதோஷம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், இரவு நடராஜர் மகா அபிஷேகம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் முத்தங்கி சேவை, இரவு தங்க சேஷ வாகனத்தில் பவனி.
* திருப்பெருந்துறை மாணிக்கவாசகர் பஞ்ச பிரகார உற்சவம், இரவு வெள்ளி ரதத்தில் புறப்பாடு.
* சிதம்பரம் சிவபெருமான் நடராஜ மூர்த்தி, சிவகாம சுந்தரி ரத உற்சவம்.
* சங்கரநயினார் கோவில் சங்கரலிங்க பெருமான் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.

11-ந்தேதி (புதன்) :

* ஆருத்ரா தரிசனம்.
* திருச்செந்தூர் சுப்பிரமணியர் கோவிலில் பார்வதி அம்மன் ஊஞ்சல் சேவை.
* சகல சிவன் கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் ராட்டினம், பொன்னூஞ்சல்.
* சிதம்பரம் ஆடல்வல்லான் சித்திரசபையில் ரகசிய பூஜை செய்தருளி, ஆருத்ரா மகா தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (வியாழன்) :

* பவுர்ணமி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் காலை தங்கப் பல்லக்கில் வீற்றிருந்த திருக்கோலம்.
* காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு கண்டருளல்.
* சமநோக்கு நாள்.

13-ந்தேதி (வெள்ளி) :


* போகி பண்டிகை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் காலை தங்கப் பல்லக்கில் தங்க கவசம் அணிந்து பவனி.
* திருமோகூர் காளமேகப்பெருமாள், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவ சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்க பாவாடை தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

14-ந்தேதி (சனி) :

* பொங்கல் பண்டிகை.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கல் யானைக்கு கரும்பு அளித்த லீலை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலமாய், மாலை தங்கப் பல்லக்கில் பவனி.
* சபரிமலையில் மகரஜோதி தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

15-ந்தேதி (ஞாயிறு) :


* மாட்டுப்பொங்கல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தங்க தோளுக்கினியானில் பெரியாழ்வார் சன்னிதிக்கு எழுந்தருளல், இரவு ஆண்டாள் சன்னிதியில் முத்துக்குறி கண்டருளல்.
* திருவள்ளூர் வீரராகவ பெருமாள், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஆகிய தலங்களில் இராப்பத்து உற்சவம்.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் கனுபாரி வேட்டைக்கு எழுந்தருளல்.
* கீழ்நோக்கு நாள்.

16-ந்தேதி (திங்கள்) :

* உழவர் திருநாள்.
* ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார், ஸ்ரீரங்கம் நம்பெருமாள், கும்பகோணம் சாரங்கபாணி ஆகிய தலங்களில் திருவாய்மொழி உற்சவ சேவை.
* திருமயம் ஆண்டாள் புறப்பாடு.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

Similar News