ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (20-12-2016 முதல் 26-12-2016 வரை)

Published On 2016-12-20 03:27 GMT   |   Update On 2016-12-20 03:27 GMT
20-12-2016 முதல் 26-12-2016 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
20-ந்தேதி (செவ்வாய்) :

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

21-ந்தேதி (புதன்) :

* மதுரை மீனாட்சி அம்மன் சகல ஜீவகோடிகளுக்கு படியளந் தருளிய லீலை.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

22-ந்தேதி (வியாழன்) :

* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.

23-ந்தேதி (வெள்ளி) :

* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாட வீதி புறப்பாடு.
* திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை.
* சமநோக்கு நாள்.

24-ந்தேதி (சனி) :

* சுமார்த்த ஏகாதசி.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு கண்டருளல்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* இன்று கருட தரிசனம் நன்மை தரும்.
* சமநோக்கு நாள்.

25-ந்தேதி (ஞாயிறு) :

* கிறிஸ்துமஸ் பண்டிகை.
* ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* கீழ்நோக்கு நாள்.

26-ந்தேதி (திங்கள்) :

* பிரதோஷம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* இன்று மாலை அனைத்து சிவாலயங் களிலும், நந்தீஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு.
* சமநோக்கு நாள்.

Similar News