ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (13-12-2016 முதல் 19-12-2016 வரை)

Published On 2016-12-13 02:50 GMT   |   Update On 2016-12-13 02:50 GMT
13-12-2016 முதல் 19-12-2016 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
13-ந் தேதி (செவ்வாய்) :

* மிலாடி நபி.
* பவுர்ணமி
* குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.
* திருப்பரங்குன்றம், சுவாமிமலை ஆகிய தலங்களில் முருகப் பெருமான் தீர்த்தவாரி.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சந்திரசேகரர் தெப்ப உற்சவம்.
* மேல்நோக்கு நாள்.

14-ந் தேதி (புதன்) :

* திருவண்ணாமலை அபிதகுசாம்பிகை சமேத அருணாசலேஸ்வரர் கயிலாசகிரி பிரதட்சணம், பராசக்தி அம்மன் தெப்ப உற்சவம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

15-ந் தேதி (வியாழன்) :

* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* மேல்நோக்கு நாள்.

16-ந் தேதி (வெள்ளி) :

* மார்கழி மாத பூஜை ஆரம்பம்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் உற்சவம்.
* அனைத்து ஆலயங்களிலும் அதிகாலை திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆரம்பம்.
* பத்ராச்சலம் ராமபிரான் புறப்பாடு.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

17-ந் தேதி (சனி) :

* சங்கடஹர சதுர்த்தி.
* திருமயம் சத்தியமூர்த்தி புறப்பாடு கண்டருளல்.
* இன்று விநாயகப் பெருமானை வழிபடுவது சிறப்பு தரும்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* மேல்நோக்கு நாள்.

18-ந் தேதி (ஞாயிறு) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* இன்று சூரிய வழிபாடு நன்மை தரும்.
* கீழ்நோக்கு நாள்.

19-ந் தேதி (திங்கள்) :

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னி தியில் கருட ஆழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

Similar News