ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (29-11-2016 முதல் 5-12-2016 வரை)

Published On 2016-11-29 01:41 GMT   |   Update On 2016-11-29 01:41 GMT
29-11-2016 முதல் 5-12-2016 வரை நடக்க உள்ள முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
29-ந்தேதி (செவ்வாய்) :

* அமாவாசை.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் சிறிய திருவடி சேவை.
* திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் விபீஷண ஆழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* சமநோக்கு நாள்.

30-ந்தேதி (புதன்) :

* திருச்சானூர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் வீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* சமநோக்கு நாள்.

1-ந்தேதி (வியாழன்) :

* முகூர்த்த நாள்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட வாகனத்தில் வீதி உலா.
* திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

2-ந்தேதி (வெள்ளி) :

* திருச்சானூர் பத்மாவதி தாயார் சந்திர பிரபையில் பவனி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் பவனி.
* திருவிடைமருதூர் பிரகத்குசாம்பிகை புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

3-ந்தேதி (சனி) :

* சதுர்த்தி விரதம்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் உற்சவம் ஆரம்பம், காலை வெள்ளி விமானத்திலும், இரவு அதிகார நந்தி, அன்ன வாகனத்திலும் திருவீதி உலா.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை.
* திருவண்ணாமலை கார்த்திகை தீப உற்சவம் ஆரம்பம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் ரத உற்சவம்.
* கீழ்நோக்கு நாள்.

4-ந்தேதி (ஞாயிறு) :

* முகூர்த்த நாள்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சூரிய பிரபையிலும், இரவு இந்திர விமானத்திலும் பவனி.
* சுவாமிமலை, பழனி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் உற்சவம் ஆரம்பம்.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில், அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் பஞ்சமி தீர்த்தம்.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் ஆலயத்தில் கார்த்திகை உற்சவம் தொடக்கம்.
* மேல்நோக்கு நாள்.

5-ந்தேதி (திங்கள்) :

* முகூர்த்த நாள்.
* சஷ்டி விரதம்.
* திருக்கழுக்குன்றம், திருவெண்காடு, திருவாடானை, திருக்கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை பூத வாகனத்திலும், அம்பாள் வெள்ளி அன்ன வாகனத்திலும் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் இடும்ப வாகனத்தில் உலா.
* மேல்நோக்கு நாள்.

Similar News