ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (22-11-2016 முதல் 28-11-2016 வரை)

Published On 2016-11-22 04:33 GMT   |   Update On 2016-11-22 04:33 GMT
இந்த வார விசேஷங்கள் (22-11-2016 முதல் 28-11-2016 வரை) வரை நடக்கும் முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
22-ந் தேதி (செவ்வாய்):

* கால பைரவாஷ்டமி.
* சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.

23-ந் தேதி (புதன்):

* திருப்பதி ஏழுமலையப்பன் சகசர கலசாபிஷேகம்.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

24-ந் தேதி (வியாழன்):

* கீழ் திருப்பதி கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு.
* சுவாமிமலை முருகப் பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* மேல்நோக்கு நாள்.

25-ந் தேதி (வெள்ளி):

* சர்வ ஏகாதசி.
* ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, பின்னர் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

26-ந் தேதி (சனி):

* சனிப் பிரதோஷம்.
* திருச்சானூர் பத்மாவதி தாயார் கார்த்திகை உற்சவம் ஆரம்பம்.
* திருப்பதி ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.
* சகல சிவன் கோவில்களிலும் இன்று மாலை நந்தீஸ்வரர் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.

27-ந் தேதி (ஞாயிறு):


* முகூர்த்த நாள்.
* மாத சிவராத்திரி.
* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
* ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (திங்கள்):

* கீழ்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை.
* திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக் கடவூர் ஆகிய தலங்களில் 1008 சங்காபிஷேகம்.
* திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
* திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் புறப்பாடு.
* கீழ்நோக்கு நாள்.

Similar News