ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள் (8-11-2016 முதல் 14-11-2016 வரை)

Published On 2016-11-08 01:46 GMT   |   Update On 2016-11-08 03:58 GMT
8-11-2016 முதல் 14-11-2016 வரை நடக்கும் இந்த வார முக்கிய ஆன்மிக நிகழ்வுகளை பார்க்கலாம்.
8-ந் தேதி (செவ்வாய்)) :

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் சந்திர பிரபையில் பவனி.
* சிக்கல் சிங்கார வேலவர் விடையாற்று உற்சவம்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் நாற்காலி மஞ்சத்தில் புறப்பாடு.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் பவனி வருதல்.
* மேல்நோக்கு நாள்.

9-ந்தேதி (புதன்) :

* முகூர்த்த நாள்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் கற்பக விருட்ச வாகனத்தில் திருவீதி உலா.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் சேஷ வாகனத்தில் புறப்பாடு.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் ரக்‌ஷாபந்தன் நிகழ்வு.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.

10-ந்தேதி (வியாழன்)) :

* சுமார்த்த ஏகாதசி.
* வள்ளியூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வள்ளி திருக்கல்யாண உற்சவம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் திருவீதி உலா.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் பூத வாகனத்தில் பவனி.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் சயன உற்சவம்.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* கீழ்நோக்கு நாள்.

11-ந் தேதி (வெள்ளி)) :

* முகூர்த்த நாள்.
* வைஷ்ணவ ஏகாதசி.
* நாங்குநேரி உலகநாயகி அம்மன் கோவில் வருசாபிஷேகம்.
* திருமாலிருஞ்சோலை கள்ளழகர் மலைமேல் தொட்டிக்கு எழுந்தருளி, கங்கையில் எண்ணெய் காப்பு உற்சவம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் அனுமன் வாகனத்தில் பவனி.
* மேல்நோக்கு நாள்.

12-ந் தேதி (சனி)) :

* சனிப் பிரதோஷம்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் யானை வாகனத்தில் திருவீதி உலா.
* திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் ஊஞ்சல் உற்சவம்.
* திருநள்ளாறு சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு ஆராதனை.
* சமநோக்கு நாள்.

13-ந் தேதி (ஞாயிறு)) :

* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் திருக்கல்யாண உற்சவம், இரவு வெள்ளி ரதத்தில் பவனி.
* உத்திரமாயூரம் வள்ளலார் சன்னிதியில் சுவாமி பஞ்ச மூர்த்திகளுடன் புறப்பாடு.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் ஏகாந்த மஞ்சத்தில் திருவீதி உலா.
* ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு.
* சமநோக்கு நாள்.

14-ந் தேதி (திங்கள்)) :

* பவுர்ணமி
* சகல சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம்.
* மாயவரம் கவுரி மாயூரநாதர் ரத உற்சவம்.
* திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் வெண்ணெய் தாழி சேவை, இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா.
* கீழ்நோக்கு நாள்.

Similar News