முக்கிய விரதங்கள்
ஆலிலை கிருஷ்ணர்

வம்ச விருத்தி விரத பூஜை

Published On 2022-05-18 04:16 GMT   |   Update On 2022-05-18 04:16 GMT
பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும்.
பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.

அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.
'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.

மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.

தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.

வம்ச விருத்தி விரத பூஜை செய்யும் போது இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும்...குழந்தை பாக்கியம் அருளும் வம்ச விருத்தி கவசம்
Tags:    

Similar News