முக்கிய விரதங்கள்
விநாயகர்

விநாயகரை விரதம் இருந்து வழிபட வேண்டிய நாளும்... தீரும் பிரச்சனைகளும்....

Published On 2022-01-21 05:20 GMT   |   Update On 2022-01-21 08:49 GMT
வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.
அரச மரத்தின் அடியில், மேற்கு நோக்கி வீற்றிருக்கும் விநாயகப் பெருமானை, பூச நட்சத்திரம் அன்று விரதம் இருந்து அபிஷேகம் செய்து வழிபாடு செய்தால், பணப் பற்றாக்குறை தீரும். செல்வ வளம் கொழிக்கும்.

பவுர்ணமி, தமிழ் மாதப் பிறப்பு, சதுர்த்தி திதி, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விரதம் இருந்து கணபதியை வழிபாடு செய்வதால், செய்யும் காரியங்களில் ஏற்பட்ட அனைத்து தடைகளும் விலகும்.

சிவன்- பார்வதி ஆகியோருடன் விநாயகர் வீற்றிருக்கும் உருவத்தை ‘கஜமுக அனுக்கிரக மூர்த்தி’ என்பார்கள். பெற்றோருடன் விநாயகப்பெருமான் வீற்றிருக்கும் இந்தத் திருக்கோலத்தை வழிபடுவதால் பல சிறப்புகள் வந்துசேரும். விநாயகர் வீற்றிருக்கும் இடத்திற்கு ‘ஆனந்த புவனம்’ என்று பெயர்.

வன்னி மரத்தின் அடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு, அவிட்டம் நட்சத்திரம் அன்று விரதம் இருந்து நெல் பொரியால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்யுங்கள். அதோடு ஏழை பெண்களுக்கு தானம் கொடுங்கள். அப்படிச் செய்தால், திருமணத் தடை விரைவிலேயே விலகி சுபகாரியம் முடிவாகும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில், விரதம் இருந்து தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், பசு நெய், விளக்கெண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களை கலந்து விளக்கேற்றி வழிபட்டால், தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

தஞ்சாவூர் நகரில் அமைந்துள்ள சக்கரபாணி திருக்கோவிலில், சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கும் விநாயகரை தரிசிக்கலாம். அதே போல் ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலத்தில் குழலூதும் விநாயகர் காணப்படுகிறார். இதுபோன்ற வித்தியாசமான கோலத்தில் உள்ள விநாயகரை வழிபடும் போது, எதிர்பார்த்த காரியங்கள் எந்த இடையூறும் இன்றி நடந்தேறும் என்பது நம்பிக்கை.
Tags:    

Similar News