முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இந்த கோவிலில் உள்ள முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
முடக்குவாத நோய்க்கு ஆளானவர்கள் இங்குள்ள பாலசுப்பிரமணியசாமி கோவிலின் முருகனை ஒவ்வொரு பெளர்ணமியன்றும் விரதம் இருந்து வந்து வழிபடவேண்டும்.
அல்லது தமது ஜென்ம நட்சத்திர நாளில் வழிபட முருகன் முடக்குவாதம் நீக்குவார் என்பது நம்பிக்கை.
இக்கோயிலில் முருகன், தனது ஜடாமுடியையே கிரீடம் போல சுருட்டி வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவரது பாதத்தில் நவக்கிரகங்களின் உருவம் பொறித்த தகடு வைக்கப்பட்டுள்ளது. கிரக தோஷம் நீக்குபவராக இவர் அருளுவதால், இவ்வாறு வைத்துள்ளனர். இத்தகைய அமைப்பில் முருகனைக் காண்பது மிகவும் அரிது.