ஆன்மிகம்
மகாளய அமாவாசை

இன்று துன்பம் போக்கும் மகாளய அமாவாசை விரதம்

Published On 2019-09-28 04:36 GMT   |   Update On 2019-09-28 04:36 GMT
மகாளய அமாவாசையான இன்று விரதம் இருந்து முன்னோர்களுக்கு விரதம் இருந்த தர்ப்பணம் கொடுத்தால் பாவம், சாபங்கள் தீரும். வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
அமாவாசை தினம் என்றாலே முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுக்க மிக உகந்த உன்னதமான நாள். இந்த அமாவாசை தினம் சாதாரணமாகச் சனிக்கிழமைகளில் வந்தால் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

அதுவே மூன்று மிக முக்கிய அமாவாசைகளில் ஒன்றான மகாளய அமாவாசை சனிக்கிழமை தினத்தில் வருவது மிகவும் விசேஷமாகப் பார்க்கப்படுகின்றது.

மகாளய பட்சம் எனும் 15 நாட்கள் கொண்ட இந்த புண்ணிய தினத்தின் இறுதியில் வருகின்றது மகாளய அமாவாசை. (பட்சம் என்பது 15 நாட்கள் கொண்ட கால அளவை குறிப்பதாகும். மகாளய பட்சம் என்பது ஆவணி மாதம் பெளர்ணமிக்கு பின்னர் வரும் 15 நாட்களைக் குறிப்பதாகும்.)

மகாளய அமாவாசை தினத்தில் என்ன விஷயங்கள் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு செய்தால், அந்த நாள் சிறப்பாக அமைவதோடு, நம் முன்னோர்களின் ஆசி மற்றும் இறைவனின் ஆசி கிட்டுவது நிச்சயம்.

மரங்களில் மிக புனிதத்தன்மை வாய்ந்த மரம் அரச மரம். அப்படி அரச மரத்தடியில் அமர்ந்து காட்சி தருபவர் விநாயகர். இந்த தினத்தில் அரசமரத்தைச் சுற்றி வந்து பிள்ளையாரை வணங்குவது மிகச் சிறந்த புண்ணியத்தைத் தரும். முன்னோர்களின் ஆசி கிட்டுவதோடு, நம் உடலின் நோய் குறைந்து நலம் பெறலாம். நீண்ட நாள் வாழ முடியும். 
Tags:    

Similar News