ஆன்மிகம்
கற்பகமூர்த்தி

கற்பகமூர்த்திக்கு விரதம் இருந்தால் கற்பக விருட்சமாக வாழ்க்கை மலரும்

Published On 2019-09-04 13:28 IST   |   Update On 2019-09-04 13:28:00 IST
கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சி தருவதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகிறது.
நாம் எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தங்கு தடையின்றி வெற்றி பெற வேண்டுமானால், விக்னேஸ்வரரை விரதம் இருந்து வழிபட வேண்டும். ஆனைமுகப் பெருமான் ஆலயங்களில் மட்டுமல்லாமல், அரசமரம், ஆறு, குளங்களின் கரைகளிலும், இன்னும் சொல்லப்போனால் வீதிகள் தோறும் கூட வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

அப்படிப்பட்ட விநாயகப் பெருமான் திசைமாறிக் காட்சியளிப்பது பிள்ளையார் பட்டியில்தான். இந்தப் பிள்ளையார்பட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ளது. அங்கு வடக்குப் பார்த்து வீற்றிருந்து கற்பக விநாயகராக காட்சியளிக்கிறார். எனவே தான் வரத்தை அள்ளி, அள்ளித் தருகிறார். ஒருவரது ஜாதகத்தில் கேது திசை அல்லது ஏது திசை நடந்தாலும் ஆதரவுக்கரம் நீட்டுவது ஆனைமுகப் பெருமான்தான்.

அந்த ஆனைமுகப் பெருமான் கற்பக விநாயகராக பிள்ளையார்பட்டியில் காட்சி தருவதால் இவரை விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு கற்பக விருட்சமாக வாழ்க்கை மலர்கிறது. கனவுகள் அனைத்தும் நனவாகிறது.

Similar News