ஆன்மிகம்
விநாயகர்

விநாயகர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்

Published On 2019-08-26 05:29 GMT   |   Update On 2019-08-26 05:29 GMT
முழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும்.
பொதுவாக விநாயகர் பெருமான் விரத வழிபாட்டை அனைத்து நாட்களிலும் கட்டாயம் செய்ய வேண்டும். குறிப்பாக காலையில் எழுந்து, குளித்து முடித்து விட்டு உங்களின் அன்றாட பணிகளை தொடங்குவதற்கு முன்பு விநாயகப் பெருமானுக்குரிய மந்திரங்கள் துதித்து தொடங்குவதால் அவை சிறப்பான பலன்களை தருவதாக அமையும். புதன் மற்றும் சனிக்கிழமைகளில் விரதம் இருந்து விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் சாற்றி வழிபடுவது விநாயகப் பெருமானின் முழுமையான அருள் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.

முழுமுதற் தெய்வமான விநாயகப் பெருமானை விரதம் இருந்து வழிபடுவர்களுக்கு எத்தகைய காரியங்களிலும் ஏற்படுகின்ற தடை தாமதங்கள் நீங்கி, அவை சிறப்பான வெற்றியை பெறும். உடல் மற்றும் மன பலமும் அதிகரிக்கும். புத்திசாலித்தனம் மேம்படும். கல்விக் கலைகளில் சிறக்க முடியும். தீய எண்ணங்கள், குணங்கள் நீங்கும். தொழில், வியாபாரங்களில் வெற்றியும் அதிக லாபமும் கிடைக்கும். வீடு, வாகனம் போன்ற சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும். மற்ற தெய்வங்களின் அருள் கடாட்சம் கிடைக்க வழிவகை செய்யும்.
Tags:    

Similar News