ஆன்மிகம்
அனுமன்

ஆஞ்சநேயர் விரத வழிபாட்டிற்குரிய தினங்கள்

Published On 2019-08-14 04:52 GMT   |   Update On 2019-08-14 04:52 GMT
ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.
ராமாயணத்தில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின் நிழலாகவும், அன்புபிற்குரிய அடியவராகவும் இருந்தவர் ஸ்ரீ ஆஞ்சநேயர் எனப்படும் அனுமன். நன்மைகள் அனைத்திற்கும் சிறந்த உதாரணமாக ஸ்ரீ ஆஞ்சநேயர் இருக்கிறார். தனது பிரதி பலன் கருதாத பக்தி மற்றும் பிரம்மச்சரிய சக்தியால் சிரஞ்சீவித்துவம் எனப்படும் இறவாநிலை பெற்றவர்.

தொண்டருக்கு தொண்டராக இருக்கும் அந்த அனுமன் தனது பெயரை கூறி வழிபடும் பக்தர்களை விட, தனது நாதராகிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ராம நாமத்திற்கு மிகவும் கட்டுப்பட்டவராக இருக்கிறார். அந்த ஆஞ்சநேய மூர்த்தியை விரதம் இருந்து வழிபட்டு வரும் பக்தர்களுக்கு வாழ்வில் நன்மைகள் அதிகம் உண்டாகும்.

சக்தி வாய்ந்த தெய்வமாக ஆஞ்சநேயர் எனப்படும் அனுமனை விரதம் இருந்து வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறந்தது தான் என்றாலும் மாதந்தோறும் வருகின்ற செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் அனுமனை வழிபடுவதற்கு சிறந்த தினங்களாக இருக்கிறது.

இந்த தினங்களில் விரதம் இருந்து அனுமன் கோவிலுக்கு சென்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி, வெண்ணெய் நைவேத்தியம் செய்து, தீபம் ஏற்றி அனுமன் காயத்ரி மந்திரங்களை துதித்து வழிபடுவர்களின் வாழ்வில் ஸ்ரீ ஹனுமான் மிக சிறப்பான மாற்றங்களை ஏற்படுத்துவார்.
Tags:    

Similar News