ஆன்மிகம்
வரலட்சுமி விரதம்

வரம் கொடுக்கும் வரலட்சுமி விரதம்

Published On 2019-08-09 04:04 GMT   |   Update On 2019-08-09 04:04 GMT
இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும். இந்த விரதம் கடைபிடிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
இன்று வரம் கொடுக்கும் லட்சுமியை வரலட்சுமி என்றழைத்து விரதம் இருந்து வழிபட ஏற்ற நாளாகும்.

அன்றைய தினம் அதிகாலையில் வீட்டைச் சுத்தம் செய்து மாவிலைத் தோரணம் கட்டி, கோலமிட்டு லட்சுமிக்கு வரவேற்புக் கொடுக்க வேண்டும். ‘திருமகளே வருக’ என்று கோல மாவினால் எழுதலாம். பூஜை அறையில் வரலட்சுமியின் படத்தை பலகை மேல் நடுவில் வைக்க வேண்டும். அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு தட்டில் அரிசி பரப்பி வைக்க வேண்டும்.

குடத்திற்கு சந்தனம், குங்குமம் பொட்டு வைத்து, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, இனிப்புப் பொருள் நைவேத்தியத்தோடு லட்சுமி கவசம் பாடி வழிபாடு செய்தால் பணத் தேவைகள் பூர்த்தி யாகும். அன்றாட வாழ்க்கையின் அனுபவிக்கும் துன்பமெல்லாம் உந்தனருள் பெற்றுவிட்டால் ஓடுவதும் உண்மையன்றோ? இன்றோடு துயர்விலக, இனிய தனலட்சுமியே! மன்றாடிக் கேட்கின்றேன் வருவாய் இதுசமயம்! என்று பாடுங்கள்.

லட்சுமி இல்லம் தேடி வருவாள். ஆடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும், ஆனந்தம் வந்து சேரவும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளை மேற்கொள்ளுங்கள். வருடம் முழுவதும் வசந்த காலமாகும்.
Tags:    

Similar News