ஆன்மிகம்

மாரியம்மன் விரத வழிபாட்டு பலன்கள்

Published On 2019-06-21 06:41 GMT   |   Update On 2019-06-21 06:41 GMT
மாரியம்மனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது.
பொதுவாக அம்மன் என்றாலே அதீத சக்தி வாய்ந்த உக்கிர தெய்வங்கள் என்பதால் அந்த தெய்வங்களை விரதம் இருந்து வீட்டில் வழிபடுவதை விட அம்மன் கோயில்களில் சென்று அம்மனை வழிபடுவது சிறந்ததாகும். அப்படி வழிபடும் போது அம்மன் தெய்வங்களுக்கு மிகவும் பிரியமான கேழ்வரகு கூழ் நைவேத்தியம் செய்து வழிபடலாம் அல்லது பொங்கல் வைத்தும் வழிபடலாம். அம்மன் தெய்வங்களைப் வழிபடுவதற்குரிய சிறந்த காலமாக ஆடி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் விரதம் இருந்து மாரியம்மன் கோவிலுக்கு சென்று மாரியம்மனை வழிபடுவது சாலச் சிறந்ததாகும்.

மாரியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட விரும்புவார்கள் வாரத்தில் வருகின்ற செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் காலை அல்லது மாலை நேரத்தில் வருகின்ற சுப முகூர்த்த நேரத்தில் பொங்கல் வைத்து வழிபட வேண்டும். இது இயலாதவர்கள் மாதத்தில் வருகின்ற பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிகளில் அம்மனை வழிபடலாம். அம்மன் தெய்வங்களுக்குரிய ஆடி மாதத்தில் வருகின்ற ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் மிகவும் விசேஷமானதாகும். மற்ற காலங்களில் மாரியம்மனுக்கு கூழ் படைத்து அல்லது பொங்கல் வைத்து வழிபட முடியாதவர்களும் ஆடி மாதத்தில் மட்டுமாவது மேற்கூறிய வழிபாட்டை செய்வது அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் அனைத்து விதமான நன்மைகளையும் ஏற்படுத்தும்.

மாரியம்மன் வழிபாடு பலன்கள்: சக்தி வாய்ந்த காக்கும் தெய்வமாக மாரியம்மன் தேவி இருக்கிறார். பொதுவாக மக்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் அம்மை நோய்கள் மற்றும் இதர உடல்நல பாதிப்புகள் நீங்கவே மாரியம்மனை வழிபடுகின்றனர். எனினும் மாரியம்மனை விரதம் இருந்து வழிபடும் பக்தர்களுக்கு துஷ்ட சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்குகிறது. எதிரிகள் தொல்லை, திடீரென ஏற்படும் ஆபத்துகள் போன்றவை ஏற்படாமல் காக்கிறது. தொழில், வியாபாரங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சக வியாபாரிகளின் கடும் போட்டி மற்றும் மறைமுக சதிச் செயல்களால் வியாபாரம், பண நஷ்டம் போன்றவை நீங்கி லாபங்களை பெருக்குகிறது.

Tags:    

Similar News