ஆன்மிகம்

சுவாதி விரத மகிமை

Published On 2019-06-12 03:03 GMT   |   Update On 2019-06-12 03:03 GMT
சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும்.
சுவாதி நட்சத்திரம் வாயுவின் நட்சத்திரம், வாயுபகவான் எவ்வளவு வேகத்தில் வருகிறாரோ அது போல் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் வாயு வேகத்தில் வந்து நரசிம்மர் நம்மை பாதுகாத்து அருள் செய்வார்.

சுவாதி நட்சத்திரத்தில் நரசிம்மரை தொடர்ந்து விரதம் இருந்து வழிபாடு செய்தால் ருண விமோசனம் என்று கூறக்கூடிய கடன் தொல்லைகள் நீங்கி செல்வச் செழிப்புகள் ஏற்படும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். நரசிம்மர் அவதாரம் எடுத்த காலம் மாலைப்பொழுது என்பதால் மாலை வேளையில் நரசிம்மரை வழிபாடு செய்தால் விசேஷமான பலன்கள் கிட்டும்.

சுவாதி நட்சத்திர நாளில் விரதம் அனுஷ்டித்ததாலே கயவனாக இருந்த சுவேதன் என்னும் அசுரன் மறுபிறவியில் பிரகலாதன் ஆக பிறந்து பெருமாள் அருள் பெற்றதாக விஷ்ணுவே கூறியுள்ளார்.

மேலும் துலா ராசியில் சூரியன் சங்காரம் செய்யும் போது சுவாதி நட்சத்திரத்தன்று தான் கடலில் சிப்பிக்குள் முத்து உருவாகின்றது. ஆகவே சுவாதியன்று விரதம் கடைப்படித்தால் நரசிம்மரின் பரிபூரண அருளுக்கும் பாத்திரமாகலாம்.
Tags:    

Similar News