ஆன்மிகம்

வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம்

Published On 2019-06-08 06:16 GMT   |   Update On 2019-06-08 06:16 GMT
வைகாசி வளர்பிறை சஷ்டி தினமான இன்று விரதம் இருந்து முருகப் பெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
வைகாசி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.

அன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும்.

பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

இந்தப் வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பணியிடங்களில் தொழில் வியாபாரங்களில் இருந்து வரை நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி அடைந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். திருமணம் ஆகாமல் காலதாமதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் ஏழ்மை நிலை அறவே நீங்கும்.
Tags:    

Similar News