ஆன்மிகம்

சனிக்கிழமை விரதம் இருப்பதன் மகிமை என்ன?

Published On 2019-05-19 07:09 GMT   |   Update On 2019-05-19 07:09 GMT
தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கம் பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலம் நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகள் உகந்த நாட்கள்.

சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய ” என்று உச்சரித்து விரத்தை ஆரம்பிக்கலாம். அன்று ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ண வேண்டும். அசைவம் கூடாது. அதன் பின் பெருமாள் கோவிலுக்குச் சென்று பெருமாளை வழிபடுதம் அவசியம்..

அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிப்பாட்டை செய்யலாம். சனிக்கிழமை இருக்கும் விரதம் எளிமையானது. பகலில் பழம், தீர்த்தம் மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் பெருமாளுக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.

புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் விசேஷம். இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி கடைசி சனியன்றாவது விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம். கோவிலுக்கு செல்ல முடிந்தவர்கள் கோவிலுக்கு சென்று விட்டு வரவும்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்திவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.

இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். அன்று விரதம் இருக்கும்போது தங்கள் பலன்களை அதிகரித்துக் கொள்ளவும், மற்ற ராசியினரும் லக்னத்தினரும் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமை விரதம் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News