ஆன்மிகம்

உடலுக்கு நன்மை தரும் உபவாசம்

Published On 2019-04-30 01:28 GMT   |   Update On 2019-04-30 01:28 GMT
உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்து வந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதை நம் முன்னோர்கள் கண்டறிந்தார்கள்.
ஆசைகளை விட்டொழித்தால் அமைதி காணலாம் என்பது முன்னோர் வாக்கு. உணவின் மீது ஆசைப்படும் நாம், ஒரு நாளேனும் விரதமிருந்து வந்தால் உன்னதமான பலன் கிடைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

அன்றைய தினம் முழுவதும் உடல் உறுப்புகளுக்கு ஓய்வு கொடுப்பதால் அவை புத்துணர்ச்சியும், பலமும் பெறுகின்றன. ஆரோக்கியம் உருவாகிறது. வியாதிகளை வெளியேற்றுகிறது.

விரதம் முடிந்து மறுநாள் உணவு உண்ணும் பொழுது, குடல் உறிஞ்சிகளால் ஜீரணிக்கப்பட்டு செரிமானம் பூரணமாக அடைந்து ஆரோக்கியத்திற்கு வித்திடுகிறது. பலத்தையும் கொடுக்கிறது. அதேநேரத்தில் உபவாசம் இருக்கும் நாளில் இறைவனது நாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருப்பதால், பக்தி உணர்வு மேம்படுகிறது.

இறைவனது அருளிற்கும் பாத்திரமாக மாறுகிறோம். எனவேதான் முற்காலத்தில் வாழ்ந்த முனிவர்கள் இந்தப் பயிற்சியின் மூலம் அற்புதமான சக்தியைப் பெற்றுப் பல ஆச்சரியப்படத்தக்க சம்பவங்களை நடத்திக் காட்டினார்கள்.
Tags:    

Similar News