ஆன்மிகம்

வேண்டுதலை நிறைவேற்றும் சாய் சத்யவிரத பூஜை

Published On 2018-09-06 05:17 GMT   |   Update On 2018-09-06 05:17 GMT
சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான சாய் சத்ய விரத பூஜையை பற்றி பார்க்கலாம்.
சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம். பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும்.

21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.

Tags:    

Similar News