ஆன்மிகம்

பிரதோஷ விரத வகைகளும் - கிடைக்கும் பயன்களும்

Published On 2018-06-09 05:34 GMT   |   Update On 2018-06-09 05:34 GMT
சிவபெருமானை பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.
சிவபெருமானை நாம் நாள் தோறும் வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் எம்பெருமானை ஆலயம் சென்று வணங்குவது சிறந்த பயனை அளிக்கும். அத்தகைய பிரதோஷத்தின் வகைகளை தெரிந்து கொள்வோம்.

நித்திய பிரதோஷ விரதம் - தினமும் சூரிய அஸ்தமனத்திற்கு மூன்று நாழிகைகள் முன்னர், நட்சத்திரங்கள் உதயமாகும் வரை உள்ள நேரம் நித்திய பிரதோஷமாகும்.

திவ்ய பிரதோஷ விரதம் - பிரதோஷ தினத்தன்று துவாதசியும், திரயோதசியும் சேர்ந்து வந்தால் அது திவ்ய பிரதோஷம் எனப்படும்.

தீப பிரதோஷ விரதம் (மகா பிரதோஷம்) - தேய்பிறை சனிக்கிழமைகளில் வரும் மாத பிரதோஷம் மகா பிரதோஷம் அல்லது சனிப் பிரதோஷம் எனப்படும். இது மிகவும் சிறப்பானது.

சப்தரிஷி பிரதோஷ விரதம் - பிரதோஷ காலத்தில் பூஜைகளை முடித்து வானத்தில் சப்த ரிஷி மண்டலம் என்னும் நட்சத்திர கூட்டத்தை வணங்கினால் அவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும்.

ஏகாட்ச்சர பிரதோஷ விரதம் - வருடத்தில் ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும்.

அர்த்தநாரி பிரதோஷ விரதம் - வருடத்தில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர்.

திரிகரண பிரதோஷ விரதம் - வருடத்திற்கு மூன்று முறை மகா பிரதோஷம் வந்தால் அதை திரிகரண பிரதோஷம் என்பார்கள்.

பிரம்ம பிரதோஷ விரதம் - இந்த பிரதோஷத்தை கடைபிடித்தால் முன்னோர் சாபம், முன் வினை பாவம் விலகிவிடும்.

ஆட்சரப பிரதோஷ விரதம் - வருடத்தில் ஐந்து முறை மகா பிரதோஷம் வந்தால் அது ஆட்சரப பிரதோஷம்.

கந்த பிரதோஷ விரதம் - சனிக்கிழமையும், திரயோதசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர்.

சட்ஜ பிரபா பிரதோஷ விரதம் - வருடத்தில் ஏழு மகா பிரதோஷம் வந்து அதை கடைப்பிடித்தால் பிறவி என்னும் பெரும் கடலை நீந்தி, பிறப்பில்லா பெருமையை பெறலாம்.

அஷ்டதிக் பிரதோஷ விரதம் - வருடத்தில் எட்டு மகா பிரதோஷத்தை கடைப்பிடித்தால் அஷ்டதிக் பாலகர்களும் மகிழ்ந்து நீடித்த புகழ், செல்வாக்கு ஆகியவற்றை தருவார்கள்.

நவகிரக பிரதோஷ விரதம்
- வருடத்தில் ஒன்பது மகா பிரதோஷம் வந்தால் அது நவகிரக பிரதோஷமாகும்.

துத்த பிரதோஷ விரதம் - வருடத்தில் வரும் பத்து மகா பிரதோஷத்தையும் கடைபிடிப்பது துத்த பிரதோஷம் எனப்படும்.
Tags:    

Similar News