ஆன்மிகம்

ராகுகால பைரவர் விரத வழிபாடு

Published On 2018-03-27 08:12 GMT   |   Update On 2018-03-27 08:12 GMT
தேய்பிறை அஷ்டமி நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.

அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் தொங்கும்; அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்.

இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது 16 மாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டதால் கிடைத்த அனுபவ உண்மைகள் ஆகும்.

1. நமக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2. நாம் தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3. வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்.

4. சனியின் தாக்கம் (ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி) தீரும்.
5. வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டா கும். தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக் கொண்டே செல்லும்.
6. அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.அரசியல் சூழ்ச்சிகள் நிர்மூலமாகும்.
7. பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்து விடும்.
8. நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
Tags:    

Similar News