ஆன்மிகம்

பேரின்ப வாழ்வு அருளும் அஷ்டமி விரதம்

Published On 2018-02-23 08:43 GMT   |   Update On 2018-02-23 08:43 GMT
ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து வழிபாடு செய்து பலன் பெறலாம்.
சிவ மகா புராணத்தில் அஷ்டமி விரதம் பற்றிய செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. அஷ்டமி என்பது எட்டாவது திதி. அதிலும் தேய்பிறையில் வரும் அஷ்டமி மிகவும் விசேஷமாகச் சொல்லப்படுகிறது. இந்த விரதம் தொடங்குபவர்கள் மார்கழி மாதத்தில் தேய்பிறையில் வரும் அஷ்டமியில் ஆரம்பிக்க வேண்டும்.

அஷ்டமி நாட்களில் தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதும் விரதமிருப்பதும் நல்ல பலன்களைத்தரும் அஷ்டமி விரதமிருப்பவர்கள் அழகிய உருவத்தைப் பெறுவார்கள். உடல் ஊனமில்லாமலும் செல்வச் செழிப்புடனும் இருப்பார்கள் என்றும் சிவபுராணம் கூறுகிறது.

தேவலோக பெண்களால் கூறப்பட்ட விரதம் புதாஷ்டமி விரதம். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் வரும் அஷ்டமியாவது புதன் கிழமை அன்று வந்தால் அந்த நாள் புதாஷ்டமி எனப்படும்.

புதாஷ்டமி விரதமிருந்தால் இழந்த பொருளை திரும்பப் பெறலாம்  நன் மக்கள் பேறு உண்டாகும் மரணத்துக்குப் பின் பேரின்ப வாழ்வு நிச்சயம்

சகல சௌபாக்யங்களும் தரும் விரதம் என்று சூத முனிவர் நைமிசாரண்யத்திலுள்ள முனிவர்களுக்கு கூறிய விரதம் அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் கிருஷ்ணபட்சத்து அஷ்டமியில் விரதமிருந்து பரமேஸ்வரனை பூஜிப்பதே அஷ்டமி விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வரும் அஷ்டமிக்கு வெவ்வேறு பெயர்கள் உள்ளன.

ஆரோக்கியமாக உடல் குறைபாடின்றி இருக்க விரும்புவர்கள் எல்லா அஷ்டமி தினங்களிலும் விரதம் இருந்து பலன் பெறலாம்.
Tags:    

Similar News