ஆன்மிகம்

விருப்பங்களை நிறைவேற்றும் சித்திரை ஏகாதசி விரதம்

Published On 2018-02-01 07:55 GMT   |   Update On 2018-02-01 07:54 GMT
சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் நீங்கி விருப்பங்கள் எல்லாம் நிறைவேறும்.
சித்திரை மாதத்தில் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இந்த மாதத்தின் தேய்பிறை ஏகாதசி, ‘பாப மோசனிகா ஏகாதசி’ எனப்படும். இந்த நாளில் விரதமிருந்து பெருமாளை வழிபட்டால், நம் பாவங்கள் யாவும் பொசுங்கிவிடும். சாபத்தின் காரணமாக பேயாக மாறித் திரிந்த மஞ்சுகோஷை என்ற தேவமங்கை, இந்த விரதத்தைக் கடைப்பிடித்து இறையருளால் சாபம் நீங்கப் பெற்றாள்.

சித்திரை வளர்பிறையில் வருவது ‘காமதா ஏகாதசி’ எனப்படும். விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் விரதம் இது. லலிதன் என்ற காந்தர்வன், ஒரு சாபத்தின் காரணமாக ராட்சஸ உருவை அடைந்தான். அவனது மனைவியான லலிதை, சித்திரை மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து, கணவனின் சாபம் நீங்குவதற்கு வழி கண்டாள். விருப்பத்தை எல்லாம் நிறைவேற்றும் விரதம் ஆதலால் காமதா ஏகாதசி என்று பெயர்.
Tags:    

Similar News