ஆன்மிகம்

புகழ் பெருக வைக்கும் ‘பூச’ விரத வழிபாடு

Published On 2018-01-30 05:51 GMT   |   Update On 2018-01-30 05:51 GMT
தைப்பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும் போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும்.
ஆசைகள் நிறைவேற வேண்டுமானால், பூசத்தில் வழிபாடு வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசைகள் உண்டு. அந்த ஆசைகளை நிறைவேற்றுவது தெய்வ வழிபாடுகள்தான். அந்த அடிப்படையில் நாளை தைப்பூசம் வருகிறது. 

அந்த தைப்பூச திருநாளில் விரதமிருந்து முருகப்பெருமானை கொண்டாடுவதற்கு காலை, மாலை இருவேளைகளிலும் குளித்து கவசப் பாராயணங்களைப் படித்து வழிபட வேண்டும். வேலை வணங்குவதே வேலை எனக் கொண்டவர்களுக்கு நாளும், பொழுதும் நல்லதே நடைபெறும்.

பூசத்தன்று கந்தப்பெருமானின் ஆலயங்களுக்கு நடந்து சென்று வழிபட்டு வந்தால், ஞாலம் போற்றும் வாழ்க்கை அமையும்.

பூசத்தன்று முருகப்பெருமானை நாம் நினைத்தாலே போதும். போராட்டமான வாழ்க்கை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த பூந்தோட்டமாக மாறும். 
Tags:    

Similar News