ஆன்மிகம்

சூரிய தோஷம் உள்ளவர்கள் கடைபிடிக்க வேண்டிய விரதம்

Published On 2018-01-19 03:31 GMT   |   Update On 2018-01-19 03:31 GMT
சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சூரிய தோஷம் உடையவர்கள், அதற்குரிய பரிகாரம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருந்து காலையிலே வீட்டில் இருந்தவாறு சிவப்பு பூவும் நீரும் கைகளில் ஏந்தி, சூரிய பகவானே எனது சூரிய தோஷத்தை போக்கியருளும் என வேண்டி பூவையும் நீரையும் சூரியனைப் பார்த்தவாறு பூமரத்தடியில் போட்டு வணங்கவும். 

16,36, 108 தடவைகள் இதனை செய்யலாம். கோவிலில் சூரியனுக்கு அபிஷேகம் செய்யலாம். சர்க்கரை பொங்கல் நைவேதிக்கலாம். கோதுமை தானம் கொடுக்கலாம். சிவப்புப்பட்டு, சிவப்பு பூ மாலை அணியலாம். சிவப்பு பூவால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தினமும் சூரிய கவசம் படிப்பது மிக்க பலனைத் தரும். வீட்டியே சர்க்கரைப்பொங்கல் வைத்து அதனை சூரியனுக்கு அர்ப்பணித்து வணங்கும் முறையும் நல்லது. 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் விரதமிருந்து அனுமன் கோவிலுக்குப் போய் வழிபடுங்கள். தாமிரத்தால் செய்த இஷ்டதெய்வ டாலர் அல்லது அனுமன் டாலரை அணிந்து கொள்ளுங்கள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6.15 முதல் 6.45-க்குள் வீட்டு பூஜையறையில் பசுநெய்தீபம் 5 அகலில் ஏற்றிவைத்து வழிபடுங்கள். 
பசுமாட்டுக்கு கோதுமை அல்லது கோதுமைத்தவிடு வாங்கிக் கொடுங்கள்.

ஆதித்ய ஹ்ருதயம், அனுமன் சாலீசா துதிகளை தினமும் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.

வசதி இருப்பவர்கள், மாணிக்கக் கல்லில் டாலர் செய்து கழுத்தில் அணியுங்கள். அல்லது, மாணிக்கத்தால் செய்த விநாயகரை பூஜியுங்கள்.

வருடத்திற்கு ஒரு முறை அனுமன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து விட்டு கோதுமையால் ஆன இனிப்பு வகைகளை இயன்ற அளவு தானம் செய்யுங்கள்.
Tags:    

Similar News