ஆன்மிகம்

தெய்வங்களுக்கு உகந்த கிழமையும் - விரத வழிபாடுகளும்

Published On 2018-01-12 08:47 GMT   |   Update On 2018-01-12 08:47 GMT
இந்து தெய்வங்களுக்கு உகந்த கிழமைகளும் அந்த கிழமைகளில் விரதமிருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த தினமாகும். எனவே அன்றைய தினம் ஈசனை நினைத்து விரதமிருந்து வழிபடுவது நல்லது.

செவ்வாய்க்கிழமையில் அனுமனை விரதமிருந்து வழிபாடு செய்யலாம். துர்க்கையை வழிபாடு செய்வதும் சிறப்பான பலனைத் தரும். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வந்தால் வாழ்க்கை வளம் பெரும்.

புதன்கிழமை விநாயகப் பெருமானை வழிபட உகந்த நாளாகும். எந்தக் காரியத்தை தொடங்குவதாக இருந்தாலும், முதலில் விநாயகரை வணங்கி விட்டுத் தொடங்க வேண்டும்.

வியாழக்கிழமையில் மகாவிஷ்ணுவை விரதமிருந்து வழிபாடு செய்வது சிறப்பானது. விஷ்ணுவையும் லட்சுமிதேவியையும் விரதமிருந்து வணங்க வேண்டும். மேலும் தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை வழிபடுவதும் நலம் சேர்க்கும்.

வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனையும், அவரது அவதாரங்களையும் விரதமிருந்து வழிபடுவது நன்மை பயக்கும்.

சனி பகவானை, சனிக்கிழமை தோறும் வழிபடுவது நன்மை தரும். மேலும் அன்றைய தினம் பெருமாள், காளி, ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்ளலாம்.

ஞாயிற்றுக்கிழமையில் வழிபடுவதற்கு ஏற்ற தெய்வம் சூரிய பகவான். நவக்கிரங்களில் முதன்மையான சூரியனை ஞாயிறு அன்று விரதமிருந்து வழிபடுங்கள்.
Tags:    

Similar News