ஆன்மிகம்

கார்த்திகை தீபம் அன்று கடைபிடிக்க வேண்டிய விரதமுறை

Published On 2017-12-02 04:02 GMT   |   Update On 2017-12-02 04:02 GMT
திருக்கார்த்திகை தினமான இன்று முருகன், சிவபெருமானை விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும். இன்று விரதம் இருக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில் தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள் ஏற்றிவைத்து வழிபடுவர். திருக்கார்த்திகையன்று காலையில் குளித்ததும், குலதெய்வத்தை மனதில் நினைத்து பூஜை செய்ய வேண்டும். 
 
சிவனுக்கும், முருகனுக்கும் உரிய பாடல்களைப் பாட வேண்டும். அன்று மாலை அண்ணாமலைக்கு அரோகரா, நமசிவாய, சிவாயநம, சரவணபவ ஆகிய மந்திரங்களை உச்சரிக்க வேண்டும். 
 
மாலை ஆறு மணிக்கு விளக்கேற்ற வேண்டும். ஆறு விளக்குகள் குறையால் இருக்க வேண்டும். விநாயகர், முருகன், சிவன் படங்களை வைத்து பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பிடி கொழுக்கட்டை ஆகியவற்றை நைவேத்யம் செய்ய வேண்டும். தீபாராதனை காட்டி பிரசாதம் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும்.
 
தொடர்ந்து விரதமிருக்க விரும்புபவர்கள் திருக்கார்த்திகையன்று தொடங்கி, அடுத்த திருக்கார்த்திகை வரை அனுஷ்டித்தால் முருகன் அருளால் அனைத்து நலமும் பெறலாம்.
 
கோவிலில் ஏற்றப்படும் தீபத்திற்கு அவ்வளவு மகத்துவம் உண்டு. நாம் முற்பிறவியில் அறியாமல் செய்த பாவங்கள் கூட கோவிலில் தீபம் ஏற்றுவதாலும், தீபத்தை தரிசிப்பதாலும் விலகி விடும். அதனால், திருக்கார்த்திகை அன்று கோவில்களில் தீபஸ்தம்பம், அணையாதீபம், லட்சதீபம், கோடி தீபம் என்று பல பெயர்களில் ஏற்றி வைப்பர். கோவில் முன் சொக்கப்பனை கொளுத்துவர். சிவனையும், முருகனையும் அக்னி வடிவமாக வழிபடுவர்.
Tags:    

Similar News