ஆன்மிகம்

திங்கட்கிழமை சோமவார விரதம் இருக்கும் முறை

Published On 2017-11-27 06:51 GMT   |   Update On 2017-11-27 06:51 GMT
கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.
திங்கட்கிழமையை குறிக்கும் சொல்லுக்கு சோமவாரம் என்று பெயர். கார்த்திகை திங்கட்கிழமையான சோமவாரத்தில் சிவபெருமானை விரதமிருந்து வழிபடுவது சிறப்புக்குரியது.

இந்த விரதத்தை ஆண், பெண் இருவரும் கடைப்பிடிக்கலாம். இந்த வழிபாட்டுக்காக மஞ்சள்பொடி, குங்குமம், சந்தனம், பூமாலை, உதிரிப் பூக்கள், வெற்றிலை, பாக்கு, ஊதுபத்தி, சாம்பிராணி, பஞ்சு, நல்லெண்ணெய், கற்பூரம், வெல்லம், மாவிலை, வாழைப் பழம், அரிசி, தேங்காய், தயிர், தேன், தீப்பெட்டி, பூணூல், வஸ்திரம், அட்சதை (பச்சரிசியுடன் மஞ்சள்பொடி கலந்தது), பஞ்சாமிர்தம், திராட்சை, கல்கண்டு, சர்க்கரை கலந்த பசுவின்பால் ஆகியவற்றை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ராகு காலத்துக்கு முன்பே பூஜையை தொடங்கவேண்டும். அதிகாலையில் விநாயகர் பூஜை செய்து சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து, தேங்காய் உடைத்து கற்பூரம் காட்டவேண்டும். கலசத்தில் தண்ணீர் பிடித்து அதில் நாணயம், மஞ்சள்பொடி கலந்து கலசத் துக்கு மேலே மாவிலைக்கொத்தை செருகி, மையத்தில் மஞ்சள் தடவிய தேங்காயை வைத்து சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் பூஜையை தொடங்க வேண்டும்.

சாதம், நெய், பருப்பு, பாயசம், தேங்காய், வாழைப்பழம் போன்றவற்றை நைவேத்தியமாக படைக்க வேண்டும். தொடர்ந்து சிவநாமங்களைச் சொல்ல வேண்டும். பூஜை முடிந்த பிறகு, வயதான தம்பதியரை பார்வதி- பரமேஸ் வரனாக நினைத்து சந்தனம், குங்குமம் அளித்து நமஸ்காரம் செய்ய வேண்டும். அவர்களுக்கு தட்சணையும் அளிக்க வேண்டும். உணவு பரிமாறி, அட்சதையை அவர்கள் கையில் கொடுத்து வணங்கி ஆசி பெற வேண் டும். 
Tags:    

Similar News