ஆன்மிகம்

கடன் தொல்லை தீர்க்கும் செவ்வாய் அஷ்டமி விரதம்

Published On 2017-11-20 04:53 GMT   |   Update On 2017-11-20 04:53 GMT
செவ்வாய்க்கிழமையில் வரும் அஷ்டமி அன்று பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும், மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும்.
பொதுவாக அஷ்டமியில் பைரவரை விரதமிருந்து வழிபடுவது சிறப்பானது என்றாலும், அந்த அஷ்டமி தினம் செவ்வாய்க்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பானதாகும். அன்றைய தினம் பைரவரை வழிபாடு செய்தால் கடன் தொல்லை தீரும். மன அமைதியோடு, குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிலவும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தடைபட்ட சுப காரியங்கள் இனிதே நடந்தேறும்.

மேலும் செவ்வாடை சாத்தி, சிவப்பு அரளிப்பூ மாலை சூட்டி, வெல்லம் கலந்த பாயசம், உளுந்து வடை, பால், தேன், பழம் நிவேதனம் செய்து, வெள்ளை பூசணிக்காயில் நெய் விட்டு தீபம் ஏற்றி விபூதி அபிஷேகம் செய்து வழிபட்டால் சகல யோகங்களும் வந்து சேரும்.

இதே போல் வெள்ளிக்கிழமையில் வரும் தேய்பிறை அஷ்டமியும் பைரவருக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் பைரவரை வணங்குவதால் லட்சுமி கடாட்சம் பெருகும்.
Tags:    

Similar News