ஆன்மிகம்

நாளை முதல் மாலை அணிந்து விரதத்தை தொடங்கும் ஐயப்ப பக்தர்கள்

Published On 2017-11-16 09:09 GMT   |   Update On 2017-11-16 09:09 GMT
கார்த்திகை மாதம் நாளை பிறக்க இருப்பதால் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று ஐயப்பனை தரிசிப்பார்கள்.

நாளை கார்த்திகை மாதம் பிறப்பதையொட்டி ஐயப்ப பக்தர்கள் நாளை முறை 48 நாட்கள்( ஒரு மண்டலம்) மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.

நேற்றே சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் இன்றும் மாலை அணிந்தனர். சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். மாலை போடும் பக்தர்கள் துளசிமணி மாலைகள் மற்றும் கருப்பு, நீலம், காவி போன்ற வேட்டிகளையும் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.

விரதம் இருந்து செல்லும் பக்தர்களை வரவேற்க சபரிமலையும் தயாராகி விட்டது. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

சபரிமலையில் கேட்க தொடங்கி இருக்கும் சரண கோ‌ஷமும், நெய்வாசமும் இனி 2 மாதத்துக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.
Tags:    

Similar News