ஆன்மிகம்
சென்னை மவுண்ட்ரோடு தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

சென்னை மவுண்ட்ரோடு தர்காவில் சந்தனக்கூடு திருவிழா

Published On 2021-03-30 03:18 GMT   |   Update On 2021-03-30 03:18 GMT
சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை மவுண்ட்ரோட்டில் புகழ்பெற்ற ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி எனும் தர்கா உள்ளது. இந்த தர்காவில் ஆண்டு விழா கொண்டாட்டம் மற்றும் சந்தனக்கூடு கந்தூரி (உரூஸ்) விழா ஆகியவற்றின் தொடக்க விழா தர்கா வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

தர்காவின் மூத்த பரம்பரை அறங்காவலர் மற்றும் முத்தவல்லியுமான சையத் மசாரூதீன் கவர்னர் மற்றும் ஆற்காடு இளவரசருக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.

இதைத்தொடர்ந்து ஆண்டு விழா மலரை கவர்னர் வெளியிட்டார். இதன்பின்பு, அங்குள்ள ஹஸ்ரத் சையத் மூசா ஷா காதிரி சமாதியில் மலர்ப்போர்வையை கவர்னர் போர்த்தி மரியாதை செலுத்தினார். பின்னர், அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்றார்.

விழாவில் மூத்த பரம்பரை அறங்காவலர் சையத் வாஜிதுதீன், பரம்பரை அறங்காவலர்கள் சையத் மன்சூருதீன், சையத் சாதிக் முகைதீன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சந்தனக்கூடு திருவிழா நாளை (31-ந் தேதி) வரை நடக்கிறது.
Tags:    

Similar News