ஆன்மிகம்

ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு விழா நாளை தொடங்குகிறது

Published On 2019-03-07 04:37 GMT   |   Update On 2019-03-07 04:37 GMT
தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா வருடம்தோறும் சிறப்பாக தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வருட ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மார்க்க பேருரையும், விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சிபாடுதலும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

இந்த விழாவை நடத்தும் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிர்வாக பொறுப்பு, தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. விழா ஏற்பாட்டிற்காக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக் மேற்பார்வையில் கமிட்டியை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.

விழா கமிட்டி உறுப்பினர்களாக அப்துல் கபூர், அபூஹனீபா, சிராஜீதீன், ஹஸனார், அப்துல் அஸீஸ், ஜாபர் சாதிக், முகமது சலீம், மாஹீன், ஷேக் பரீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Tags:    

Similar News