ஆன்மிகம்
திருவேடகம் ஏடகநாதர் கோவில்

பில்லி, சூனியம் மற்றும் பெண்களின் குறைதீர்க்கும் கோவில்

Published On 2021-02-13 07:10 GMT   |   Update On 2021-02-13 07:10 GMT
திருவேடகம் ஏடகநாதர் கோவில் இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.
மதுரையில் இருந்து தேனூர் வழியாக சோழவந்தான் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது, திருவேடகம் என்ற ஊர். இங்குள்ள இறைவன் ‘ஏடகநாதர்’ என்றும், ‘மந்திரமூர்த்தி’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இத்தல இறைவனை வழிபட்டால் பில்லி, சூனியம் நீங்கும் என்கிறார்கள். இத்தல இறைவியான ஏலவார்குழலி அம்மை, பெண்களின் குறைகளை நீக்கும் தாயுள்ளம் படைத்தவளாகத் திகழ்கிறாள்.

இந்த ஆலயத்தின் தல விருட்சம், வில்வ மரம் ஆகும். இங்குள்ள தீர்த்தம், ‘பிரம்ம தீர்த்தம்.’ இந்த நீரையே இறைவனை அபிஷேகம் செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள்.
Tags:    

Similar News