ஆன்மிகம்
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில்

ராகு தோ‌‌ஷங்களை நிவர்த்தி செய்யும் திருத்தலம்

Published On 2021-02-09 09:06 GMT   |   Update On 2021-02-09 09:06 GMT
ராகு பகவான் இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோ‌‌ஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருமுறை ராகு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பின் நோக்கி இடம்பெயர்வார். இதனை ஒட்டி லட்சார்ச்சனை மற்றும் சந்தன காப்பு ஆகியவை இங்கு நடைபெறும். அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் புராணகாலத்தில் செண்பக வனமாக விளங்கியது. கால வரையறை செய்யப்படாத புராண காலத்தில் சிவபெருமான் லிங்கத் திருமேனி கொண்டு செண்பக மரத்தின் கீழ் எழுந்தருளி தேவர், மானுடர், முனிவர், அரசர் முதலியோருக்கு அருள்பாலித்தார் என தலபுராணம் கூறுகிறது.

செண்பக வனத்தில் எழுந்தருளியிருந்த சிவபெருமானை ஐந்தலை அரவாகிய ராகு வழிபட்டு தன் சாபம் நீங்கப் பெற்று இத்தலத்தின் தென்மேற்கு மூலையில் தன் இரு தேவியருடன் எழுந்தருளி தன்னை வழிபடுவோரின் ராகு தோ‌‌ஷங்களை நிவர்த்தி செய்து அருள்பாலிக்கின்றார்.

இத்தலப் பெருமானை வழிபட்டதால் இப்பெருமான் நாகேஸ்வரர் என்னும் பெயர் பெற்று விளங்குகிறார். ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தொடங்கி 10 நாட்கள் பெருவிழா நடைபெறும். ஒன்பதாம் நாள் திருத்தேர் கடைசி ஞாயிறன்று சூரிய திருக்குளத்தில் புனித நீராடலும் நடைபெறும்.
Tags:    

Similar News