திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.
பரிகாரம் செய்ய திருநள்ளாறு போக முடியலையா... அப்ப பொழிச்சலூர் போங்க...
பதிவு: ஜனவரி 19, 2021 14:14
பொழிச்சலூர்
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார்.
சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது. எனவே இத்தலம் வடதிருநள்ளாறு என அழைக்கப்படுகிறது.
திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள், இத்தல இறைவனான அகஸ்தீஸ்வரருக்கும் சனீஸ்வரனுக்கும் அந்த பரிகாரங்களைச் செய்தால் உரிய பலன்கள் கிடைக்கும்.