ஆன்மிகம்
கடன் தொல்லை தீர பரிகாரம்

உங்கள் கடன் தொல்லை தீர வேண்டுமா? இந்த நாளில் கடன் தொகையை திரும்ப கொடுங்க...

Published On 2020-09-26 06:05 GMT   |   Update On 2020-09-26 06:05 GMT
இந்த நாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம்.
கரிநாள் தினமும் காலண்டர் பார்ப்பவர்களுக்கு அடிக்கடி கண்ணில் படும் ஒரு வார்த்தை. இதைப் பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ள இந்த தகவல். நாம் தமிழ் காலண்டரில் சில நாட்களில் கரிநாள் என போட்டிருப்பதை பார்த்திருப்போம். இதற்கு என்ன அர்த்தம் என்பதை தெரியாமல் பலரும் குழம்பிப் போயிருப்பார்கள். நம்மை ஒருசில விஷயங்களுக்காக எச்சரிக்கும் விதமாக ஜோதிட வல்லுனர்கள் ஆக இருந்த நம்முடைய முன்னோர்கள் பல காலங்களாக ஆராய்ந்து முடிவு செய்து இதுபோன்ற குறிப்பை எழுதி வைத்துள்ளனர்.

வருடத்தில் 34 நாட்கள் மட்டுமே கரிநாள் என குறித்து வைக்கப்பட்டுள்ளது. சித்திரை முதல் ஆடி வரை உள்ள கரிநாட்கள் உதவா நாட்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பங்குனியில் உள்ள கரிநாட்கள் மிகுந்த தீமையை தரும் நாட்கள் என்று முதன்மை ஜோதிட நூலான ஜோதிட சிந்தாமணி என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நம்முடைய தென்னிந்தியாவில் மட்டுமே கரிநாட்கள் பார்க்கப்படுகின்றன.

இந்த நாட்களில் கிழமை, திதிகள், வளர்பிறை, தேய்பிறை இவற்றின் அடிப்படையில் அமையாமல் தமிழ் மாதத்தின் நாட்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்துள்ளன. அதாவது எல்லா ஆண்டுகளிலும் வரக்கூடிய மாதங்களில் ஒரே தேதியில் இந்த நாட்கள் கரி நாட்களாக சொல்லப்படுகின்றன. எந்த ஒரு நாளாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கிரகத்தின் தலையீடு இல்லாமல் இருக்காது.

இந்த கரிநாள் என்று குறிப்பிடப்பட்டுள்ள தினங்களில் சூரியனின் கதிர்வீச்சு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் நாம் அதிகமாக அன்றைய தினம் வெயிலில் சென்றால் நம்முடைய உடல் உறுப்புகள் பாதிக்கப்படக்கூடும். உறுப்புகள் பாதிக்கப்படுவதோடு, வேலை செய்யக்கூடிய அதனுடைய தன்மையும் மாறுபட்டு, மன நிலையிலும் மாற்றங்கள் ஏற்படும். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் தேவையில்லாத பிரச்சினைகளும் ஏற்படும்.

அது மட்டுமல்லாமல் இந்த நாட்களில் திருமணம் போன்ற எந்தவிதமான சுபகாரியங்களும் செய்யக்கூடாது என நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். கரி நாட்களில் திருமணம், கிரகப் பிரவேசம், சீமந்தம், நீண்ட தூரம் பிரயாணம் இவைகளை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. கரிநாளில் இவைகளை நீங்கள் செய்தால் அவை கெடுதல்களில் முடிய வாய்ப்பு உள்ளது.

மேலும் அந்த கெடுதல்கள் உங்களுடைய வாழ்நாள் முழுவதும் நிழல் போல் தொடர வாய்ப்பு உள்ளதால், கரிநாளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ஆனால் பூஜைகள், பரிகாரங்கள், ஹோமங்கள் இவைகளையெல்லாம் கரிநாளில் செய்யலாம்.

அது போல இந்த கரிநாள் உங்களுடைய கடனை அடைக்க முக்கியமான ஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அன்று நீங்கள் வாங்கிய கடனை திருப்பி செலுத்தினால் நீங்கள் மறுபடியும் கடன் வாங்க மாட்டீர்களாம். கடன் பிரச்சினைகள் உங்களிடமிருந்து விரைவிலேயே மாறுமாம். மனிதர்களுக்கு இருக்கக் கூடிய மிக முக்கியமான பிரச்சனையே இந்த கடன் பிரச்சனை. பல தீமைகளை கொண்டிருந்தாலும் உங்களுடைய கடன் பிரச்சினையை போக்க வல்லது இந்த கரிநாள் என சொல்லப் படுகிறது. ஆகையால் இந்த நாளில் நீங்கள் கடனாளியாக இருந்தால் உங்கள் கடனில் முடிந்த அளவு திருப்பி செலுத்தும் பொழுது உங்களுடைய கடன் விரைவில் முடிவடையும். மீண்டும் நீங்கள் கடன் வாங்க மாட்டீர்கள்.

ஒவ்வொரு வருடமும் கரிநாட்கள் இந்த தமிழ் மாதங்களில் இந்த நாட்களில் மட்டுமே வரும். சித்திரை : 6, 15. வைகாசி: 7,16,17. ஆனி: 1,6. ஆடி: 2,10,20. ஆவணி: 2,9,28. புரட்டாசி: 16,29. ஐப்பசி: 6,20. கார்த்திகை: 1,10,17. மார்கழி: 6,9,11. தை: 1,2,3,11,17. மாசி: 15,16,17. பங்குனி: 6,15,19. இந்த நாட்களை நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த கரிநாட்கள் மாறவே மாறாது. ஆகையால் இந்த நாட்களில் நீங்கள் எந்தவிதமான சுபநாள் சுபகாரியங்களையும் செய்யாமல் கரிநாளில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.
Tags:    

Similar News