ஆன்மிகம்
துர்க்கை

திருமணத்தடை, குழந்தைப்பேறு, தீராத நோய் தீர்க்கும் துர்க்கை காளியம்மன்

Published On 2020-09-25 05:11 GMT   |   Update On 2020-09-25 05:11 GMT
தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும்.
சேலம் மாவட்டம் அழகாபுரம் பெரிய புதூரில், பிரசித்தி பெற்ற துர்க்கை காளியம்மன் கோவில் உள்ளது.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் துர்க்கை காளியம்மனுக்கு, புதன்கிழமை தோறும் அபிஷேகம் செய்து, 18 நெய் தீபம் ஏற்றி மனமுருகி வழிபட்டால் அவர்களின் நோய் குணமாகும் என்பது பக்தர்களின் அதீத நம்பிக்கையாகும். மேலும் தொழில் வளம் பெருகவும், திருமணத்தடை அகலவும் மற்றும் குழந்தைப்பேறு கிடைக்கவும் அம்மனின் பாதத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து பக்தர்கள் பெற்றுச் செல்கிறார்கள்.

அதை வீட்டில் வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்கிறார்கள். இதேபோல் நீண்ட நெடுநாள் வேண்டுதல் நிறைவேறியவுடன் துர்க்கை காளியம்மனுக்கு புடவை, எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பூ ஆகியவற்றை பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்குவதுடன் பொங்கல் வைத்து நைவேத்தியம் படைத்தும் அம்மனை தரிசித்து செல்கிறார்கள்.
Tags:    

Similar News