ஆன்மிகம்
திருப்பாம்புரம்

ராகு, கேது தோஷத்துக்கான சிறப்பு மிக்க பரிகாரதலம்

Published On 2020-08-31 07:05 GMT   |   Update On 2020-08-31 07:05 GMT
சிறப்பு மிக்க பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச்சிறந்த ராகு, கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம்.
சிறப்பு மிக்க பாடல் பெற்ற தென்கரைத் தலங்கள் வரிசையில் 59-வது தலமாக விளங்கும் திருப்பாம்புரம், ஒரு மிகச்சிறந்த ராகு, கேது தோஷத்துக்கான பரிகாரத் தலம். ஆதிசேஷன், ராகு, கேது மற்றும் அஷ்டமா நாகங்கள், சிவராத்திரி மூன்றாம் ஜாமத்தில் இத்தல இறைவனை வழிபட்டு தங்கள் சாபம் நிவர்த்தியாகப் பெற்ற தலம். ஆதிசேஷனுடைய மூலவிக்கிரகமும், உற்சவ விக்கிரகமும் கோவிலில் உள்ள தலம்.

மயிலாடுதுறை-திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் காரைக்கால் வழிப்பாதையில் உள்ள கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மீ. சென்றும் இத்தலத்தை அடையலாம். திருப்பாம்பரம் ஒரு ராகு, கேது தோஷத்துக்கான நிவர்த்தி தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன், திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஐதீகம்.

இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்குகிறது. சிவராத்திரி அன்று இரவில், ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம் இதுவாகும். இந்திரன் சாபம் நீங்கிய தலமாகும். கங்கை பாவம் தொலைந்த தலமாகும். சந்திரன் பழி நீங்கிய தலமாகும் என்று சோதிட வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
Tags:    

Similar News