ஆன்மிகம்
காமாட்சி அம்மன்

குடும்ப ஒற்றுமை அதிகரிக்க பரிகாரம்

Published On 2020-08-11 07:19 GMT   |   Update On 2020-08-11 07:19 GMT
ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாம் இடமும் பலமிழந்து இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சப்தமாதிபதி பாவகிரகங்களோடு இணைந்திருந்தாலும் இல்லத்தில் ஒற்றுமை குறையும். இதற்கு வழிபாட்டின் மூலம் தீர்வு காணலாம்.
‘மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்’ என்றும், ‘கணவன் அமைவதெல்லாம் கடவுள் கொடுத்த வரம்’ என்று தான் சொல்ல வேண்டும். அந்த அடிப்படையில் ஒவ்வொரு ஜாதகத்திலும் களத்திர ஸ்தானாதிபதி பகை வீட்டில் இருந்தாலும், நீச்சம் பெற்றுச் சூரியனோடு கூடியிருந்தாலும், பாவ கிரகங்களோடு சம்பந்தப்பட்டிருந்தாலும் குடும்பத்தில் ஒற்றுமைக் குறைவு ஏற்படும்.

ஜாதகத்தில் இரண்டாம் இடமும், ஏழாம் இடமும் பலமிழந்து இருந்தாலும், அஷ்டம ஸ்தானத்தில் சப்தமாதிபதி பாவகிரகங்களோடு இணைந்திருந்தாலும் இல்லத்தில் ஒற்றுமை குறையும். எப்போதும் சண்டை சச்சரவு உருவாகிக் கொண்டேயிருக்கும். இதற்கு வழிபாட்டின் மூலம் தீர்வு காணலாம். குடும்ப உறவைச் சீராக்கிக் கொள்ளலாம். 7, 12 ஆகிய இடங்களுக்கு அதிபதிகளை ஆராய்ந்து அம்சத்திலுள்ள கிரகங்களின் நிலை பார்த்து அதற்குரிய ஆலய வழிபாடுகளை மேற்கொண்டால் ஒற்றுமை பலப்படும். காமாட்சி அம்மன் படத்தை இல்லத்து பூஜை அறையில் வைத்து காமாட்சி அம்மன் பதிகம் பாடி வழிபட்டால் கருத்து வேறுபாடுகள் அகலும்.

சிவல்புரி சிங்காரம்
Tags:    

Similar News