ஆன்மிகம்
வாஸ்து

அலுவலங்களில் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து முறை

Published On 2020-07-22 05:51 GMT   |   Update On 2020-07-22 05:51 GMT
தொழிற் கூடங்கள், நிறுவனங்கள் செழித்து விளங்க அவற்றில் இருக்கும் அலுவலகங்களில் கீழ்க்கண்ட வாஸ்து முறைகளைக் கடைபிடிக்க வேண்டும்.
தொழிற் கூடங்கள், நிறுவனங்கள் செழித்து விளங்க அவற்றில் இருக்கும் அலுவலகங்களில் கீழ்க்கண்ட வாஸ்து முறைகளைக் கடைபிடிக்க வேண்டும். அலுவலக தலைமை அதிகாரியின் அறை அரை சதுர வடிவிலோ அல்லது செவ்வக வடிவிலோ அமைய வேண்டும்.

இந்த அறையை தென் மேற்கு பகுதியில் அமைக்க வேண்டும். கிழக்கு அல்லது வடக்கு முகமாக தலைமை அதிகாரியின் இருக்கை இருபது நல்லது. அலுவலக வாயில் கிழக்குதிசை நோக்கியோ அல்லது வடக்கு திசை நோக்கியோ இருக்க வேண்டும்.  வடக்கு முகமாகயிருந்தால் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் கிழக்கு முகமாகயிருந்தால் தொழில் முன்னேற்றதிற்கான புதுபுது யோசனைகள் தோன்றும்.

அலுவலகத்தின் உளத்தைவிட அகலம் இரண்டு மடங்கு அதிகமாக இருப்தும் கதவுகளின் அளவு 6 அடி 4 அங்குலம் 7அடி 4 அங்குலம்  அளவில் இருபது சிறப்பு. தேனீர்வேளை உணவு இடைவேளைகளில் அலுவலர்கள் கூடும் இடம்தென்கிழக்கிலோ அல்லது வடமேற்கிலோ இருக்க வேண்டும். வரவு செலவு கணக்கு பார்பவர்கள் குபேரனின் திசையான வடக்குத் திசை நோக்கி அமர்ந்திருபது தொழிலில் நல்ல பண புழக்கத்தைக் கொடுக்கும்.  
Tags:    

Similar News