ஆன்மிகம்
ஆந்தை

ஆந்தை அலறினால் நல்லதா.. கெட்டதா?...

Published On 2020-07-10 08:21 GMT   |   Update On 2020-07-10 08:21 GMT
எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்..
தீபாவளி தின இரவில் எவர் வீட்டுக்கேனும் ஆந்தை வருவதை மிக மிக சுபச் சகுனமாக வட மாநிலத்தவர்கள் கருதுகின்றனர். மற்ற நாட்களில் வெளியில் கிளம்பும்போது ஆந்தை கண்ணில் பட்டால், போகும் காரியத்தில் வெற்றி நிச்சயம் எனத் தீர்மானமாகச் சொல்லுகின்றனர்.

சாதாரண நாட்களிலும் இரவில் ஒரு வீட்டில் ஆந்தை வந்தமர்ந்து குரல் எழுப்பினால், அந்த வீட்டில் வசிப்பவர்களுக்கு விரைவில் பொருளாதார ரீதியில் அதிர்ஷ்டம் வரும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அப்படி வந்து அமரும் ஆந்தை குரல் எழுப்பாமல் அமைதி காத்தால் மிகவும் சங்கடப்படுவார்கள்.

ஒரு வீட்டுக்கு வந்த ஆந்தை அங்கேயே கூடு கட்டி வசிக்கத் தொடங்கி, இரவு பகலாகக் குரல் கொடுத்தால் அல்லது அவ்வீட்டின் எல்லைக்குள் உள்ள கோவிலில் இப்படி நிகழ்ந்தாலும் அந்தப் பகுதிவாழ் மக்களுக்கு லட்சுமி கடாட்சம் நிச்சயம் உண்டு. பொதுவாக சந்தியா காலம் அல்லது இரவு நேரத்தில் ஆந்தை குரல் எழுப்புவது சுபமாகக் கருதப்பட்டாலும், அது எழுப்பும் குரல் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் என்று வட மாநிலங்களில் சொல்கின்றனர். அதனால் ஆந்தை குரல் கொடுக்கும்போது அதை எண்ணி, அதற்கேற்றபடி பலனா, பரிகாரமா என முடிவெடுக்கின்றனர். இதோ அந்த விவரம்..
.
ஒருமுறை: மஹா மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.
இரண்டு முறை: சந்திரனின் எண். நற்பலன் விளையும். வெகு சீக்கிரத்தில் ஒரு நற்செயலில் வெற்றி கிட்டும்.

மூன்று முறை: குருவின் எண். வீட்டில் எவருக்காவது விரைவில் திருமணம் நடக்கும். குடும்பத்தில் புதிய நபர் ஒருவரின் வருகைக்கு வாய்ப்பு உண்டு.
நான்கு முறை: ராகுவுக்கு சாந்தி செய்வார்கள்.

ஐந்து முறை: புதனின் எண். குடும்பத் தலைவருக்குப் பயணத்தால் யோகம். அது புனிதப் பயணமாகவும் அமையலாம்.

ஆறு முறை: சுக்கிரனின் எண். குடும்பத்துக்கு உறவினர் அல்லது உறவு இல்லாத- வேண்டிய அல்லது வேண்டாத நபர் திடீர் விருந்தாளியாக வருவார்.
ஏழு முறை: கேதுவுக்கு சாந்தி செய்வார்கள்.

எட்டு முறை: இதற்கும் உடனடி யாக மிருத்யுஞ்ஜய ஹோமம் செய்வார்கள்.
ஒன்பது முறை: செவ்வாயின் எண். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் ஏற்படும். விரைவில் சாதகமான பலன்கள் உருவாகும். நல்ல செய்திகள் வரும்.
தீபாவளியன்று லட்சுமிதேவி பூஜிக்கப்படு வதால், அவளுடைய வாகனமாகிய ஆந்தையும் தனி மரியாதைக்குரிய பறவையாக மதிக்கப்படுகிறது.
Tags:    

Similar News