ஆன்மிகம்
சிவன்

திருமணத் தடைநீக்கும் திருச்சிற்றம்பலம்

Published On 2020-07-09 07:31 GMT   |   Update On 2020-07-09 07:31 GMT
திருச்சிற்றம்பலத்தில் உள்ள புராதனவனேஸ்வரர் திருக்கோவில் திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இங்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.
திருச்சிற்றம்பலத்தில் புராதனவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் லிங்கத் திருமேனியாக காட்சி தரும் சிவபெருமான், பெரிய நாயகி உடனாய புராதனவனேஸ்வரராக வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

ஆடி, மார்கழி மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் இந்த ஆலயத்தில் திருமணம், காதுகுத்து, நிச்சயதார்த்தம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடந்தபடியே இருப்பதைக் காணலாம்.

இத்தல இறைவனின் பெயரைப் போலவே, இந்தக் கோவிலின் அமைப்பும், உருவச் சிலைகளும் புராதன காலத்தைச் சேர்ந்தவை போல் காட்சி தருகின்றன. இந்த ஆலயமானது திருமணத் தடை அகற்றும் பரிகாரத்தலமாக திகழ்கிறது.

சிவாலய தரிசனத்தை முடித்து வெளியே வந்தால், கிழக்கு நோக்கி 15 நிமிட நடைபயணத்தில் எமதர்மன் சன்னிதி இருக்கிறது. பிரிந்த தம்பதிகள் சேர, மரண கண்டம், விபத்துகள் நீங்க, பகை விலகவும் இந்த சன்னிதியில் பூஜைகள் நடத்தப்படுகிறது.

பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடி செல்லும் சாலையில், கீரமங்கலம் வழித்தடத்தில் சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் திருச்சிற்றம்பலம் திருத்தலம் அமைந்து உள்ளது.
Tags:    

Similar News