ஆன்மிகம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோயில்

கணவன்-மனைவி உறவு பலப்பட வழிபட வேண்டிய பரிகார தலம்

Published On 2020-05-20 09:05 GMT   |   Update On 2020-05-20 09:05 GMT
கணவன் மனைவி உறவுகள் நன்கு இறுக்கம் பெற, தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உள்ள கார்த்தவீரியார்ஜுனருக்கு எலுமிச்சை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வேண்டினால் நினைத்த கரரியம் சித்தியாகிறது.
மதுரை அழகர்கோவிலுக்கு இணையான பெருமை பெற்ற திருத்தலம் தாடிக்கொம்பு சவுந்தரராஜப் பெருமாள் கோவில். இந்த கோவில் கட்டப்பட்டு சுமார் 1000 வருடங்கள் ஆகும். அட்சுத தேவராயர் என்ற விஜய நகர ஆட்சி வழி வந்த மன்னர் கட்டியதாக வரலாறு உள்ளது. ஒவ்வொரு திருவோணநட்சத்திரத்து அன்றும், சுவாமியின் பாதத்தில் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்யப்படுகிறது.உற்சவமூர்த்தியை எடுத்து வலம் வரும் வைபவம் சிறப்பாக நடத்துகின்றனர். அப்பொழுது, சுவாமியின் முன்பு ஏற்றி வைத்த தீபம் முன்னே எடுத்து வரப்படும்.இந்த தரிசனத்தைக் காணும் பக்தர்கள் அனைவரும் பாவ விமோசனம் பெறுவர் என்பது உறுதி என்கின்றனர்.

இந்த தலத்திலுள்ள அம்மையின் பெயருக்கு ஏற்றாற்போன்று, இவருக்கு,புடவை சாத்தி, பெருமாளுக்கு துளசிமாலை அணிவித்து, அபிஷேகம் செய்ய,திருமணவரம், குழந்தை பாக்கியம், மற்றும், கல்வி அபிவிருத்தி, வியாபாரத்தில் நல்ல வளர்ச்சிகிட்டும் என்கின்றனர்.பக்தர்கள் பலர் இதைவேண்டியே இந்த கோவிலுக்கு வருவதாக கூறுகின்றனர்.

 இறை அருள் பெற்ற இடமாக இருப்பதால்,அனேக பலன்கள் கிடைக்கப்பெறுகின்றனர். இங்கு வரும் பக்தர்கள். தங்களின் உறவுகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறைந்து போக, தொலைந்து போன பொருட்கள் கிட்ட, கணவன்மனைவி உறவுகள் நன்கு இறுக்கம் பெற, இங்குள்ள, கார்த்தவீரியார்ஜுனருக்கு எலுமிச்சை மாலை சாத்தி, நெய் தீபம் ஏற்றி வேண்டினால் நினைத்த கரரியம் சித்தியாகிறது. வியாழன் தோறும், ஆண்டாள் இங்கு எழுந்தருளும் பொழுது வரன் தேடும் கன்னியர்களும் காளையர்களும், மஞ்சள் பொடி அபிஷேகம் செய்ய நல்ல வரன் கிட்டும் என்பது நம்பிக்கை. வெளிநாட்டு வரன் வேண்டினாலும் கிடைக்கும் என்கின்றனர். பொருளாதார சிக்கல்களை களைபவராக சொர்ண பைரவர் அருள் பாலிக்கிறார்.
Tags:    

Similar News